மதுரை ஆனையூர் பகுதியில் கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விழா நிறைவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “சமீபத்தில் கம்யூனிஸ்ட் கட்சியும், பாஜகவும் தங்களது கட்சி அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்த அனுமதி அளிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் தற்போது கட்சி அலுவலகங்கள், கல்யாண மண்டபங்களாக மாறிக்கொண்டிருக்கின்றன” என்று தெரிவித்தார்.
மேலும் அவர், “பாஜக அலுவலகத்தில், ஒரு இஸ்லாமிய ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் திருமணம் செய்து வைப்பார்களா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில், உயர்ந்த சாதியினருக்கும் தாழ்ந்த சாதியினருக்கும் இடையேயான திருமணத்தை நடத்துவார்களா?” என தொடர் கேள்விகளை எழுப்பினார். சமூக நீதி குறித்து தொடர்ந்து பேசி வரும் அரசியல் கட்சிகள், உண்மையில் அந்த கொள்கைகளை நடைமுறையில் பின்பற்றுகிறார்களா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் சீமான் முன்வைத்த இந்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை விஜய் அங்கிள் என அழைத்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த சீமான் “ அணில் ஏன் அங்கிள் அங்கிள் என கத்துது.. அது ஜங்கிள் ஜங்கிள் என்று தானே கத்த வேண்டும்.. அது ஏன் அங்கிள் அங்கிள்-ன்னு கத்துது.. அதிமுக யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதை அவர் நான்கரை வருடம் முதல்வராக இருந்த போது விஜய் ஏன் கேட்கவில்லை..? போன மாநாட்டில் சிஎம். சார்-ஆக இருந்தவர்? இந்த மாநாட்டில் எப்படி அங்கிளாக மாறினார்..” என்று விஜயை விமர்சித்து பேசினார்.
Read more: பீகார் வரைவு வாக்காளர் பட்டியல்.. 5 நாளில் ஆட்சேபம் தெரிவிக்க வேண்டும்…! இந்திய தேர்தல் ஆணையம்