ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தின் (DVAC) முன்னாள் எழுத்தாளர் தான் சவுக்கு சங்கர். இவரின் உண்மையான பெயர் அச்சிமுத்து சங்கர். சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக்கேட்பு வழக்கை அம்பலப்படுத்திய ஆடியோ கசிவு புகாரைத் தொடர்ந்து இவர், பணிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சர்ச்சைக்குரிய ஆடியோ கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து அவர், சிறையில் அடைக்கப்பட்டார். பிறகு, ஊழலுக்கு எதிரான ஒரு போராளியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். இந்த விவகாரத்தில் திமுக அமைச்சர் ஒருவரும் ராஜினாமா செய்தார்.
பின்னர், சிறையில் இருந்து வெளியே வந்ததும், ‘சவுக்கு’ வலைதளத்தை தொடங்கி, அரசியல் முக்கியஸ்தர்களின் ஊழலை அம்பலப்படுத்தும் பல அறிக்கைகளை வெளியிட்டார். சமூக ஊடகங்களின் வளர்ச்சியுடன், அவர் பேசுபொருளாக மாறினார். அதேபோல், யூடியூப்பில், அவர் நடத்திய நேர்காணல்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. வீடியோக்களுக்கான பார்வைகளும் அதிகரித்தன. யூடியூப் மட்டுமே உள்ள ஊடக சேனல்களில் அவர் விருந்தினராக அழைக்கப்படுகிறார்.
இதனைத் தொடர்ந்து தனியாக யூடியூப் சேனலையும் தொடங்கி நடத்தி வருகிறார். இவருடன் இணைந்து செய்தி வாசிப்பாளரான மாலதியும் பணியாற்றி வருகிறார். இவர், சவுக்கு சங்கரை நேர்காணல் செய்வதன் மூலம் பிரபலம் ஆனார். ஆனால், இவருக்கும், சவுக்கு சங்கருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே திருமணமான சவுக்கு சங்கர், தனது மனைவியை பிரிந்து மாலதியுடன் நெருக்கமாக இருந்து வருவதாகவும், அவரின் பினாமியாக மாலதி இருந்து வருவதாகவும் தகவல் கசிந்தது. இந்நிலையில் தான், தனியார் செய்தி நிறுவனத்தில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் முக்தார் அகமது, ஒரு பரபரப்பு பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில், ”சவுக்கு பத்தனன், சவுக்கு பத்தினியின் வண்டவாளம் தண்டவாளத்தில் லீலைகள் ஆதாரங்களுடன் வீடியோ விரைவில்” என்று பதிவிட்டுள்ளார். அதாவது, சவுக்கு சங்கர் மற்றும் மாலதியின் லீலைகள் குறித்து விரைவில் வீடியோ ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். முக்தாரின் இந்தப் பதிவு தற்போது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
Read More : PM SVANidhi | தெருவோர வியாபாரிகளுக்கு குட் நியூஸ்..!! கடன் தொகையை அதிரடியாக உயர்த்தியது மத்திய அரசு..!!