டிசம்பர் 14, 1929 அன்று, தி நியூயார்க் டைம்ஸில் வெளியான ஒரு செய்தி அமெரிக்காவில் மட்டுமல்ல, ஹங்கேரியிலும் மக்களை ஆச்சரியப்படுத்தியது. ஒரு சிறிய ஹங்கேரிய கிராமத்தில் சுமார் 50 பெண்கள், பெரும்பாலான ஆண்களை விஷம் வைத்து கொன்றதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
1911 மற்றும் 1929 க்கு இடையில், புடாபெஸ்டிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தெற்கே உள்ள நாகிரெவ் கிராமத்தில் பெண்கள், 50 க்கும் மேற்பட்ட ஆண்களைக் கொல்ல ஆர்சனிக் என்ற கொடிய விஷத்தை பயன்படுத்தினார்கள். மக்கள் அந்தப் பெண்களை “தேவதைகளை உருவாக்குபவர்கள்” என்று அழைத்தனர். இந்த வழக்கு பின்னர், நவீன வரலாற்றில் பெண்களால் நடத்தப்பட்ட மிகப்பெரிய படுகொலை என்று பார்க்கப்பட்டது.
இந்த கொலை வழக்கில் முக்கிய சந்தேக நபர் கிராம மருத்துவச்சி சோசானா ஃபஸ்காஸ் ஆவார். கிராமத்தில் மருத்துவர்கள் யாரும் இல்லை (அப்போது ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது), எனவே அவர் மக்களுக்கு மருந்துகளை வழங்கினார். தங்கள் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு அவர் உதவியதால் பெண்கள் அவரை நம்பினர்.
தங்கள் கணவரால் துன்பங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு ஒரு எளிய தீர்வை வழங்க முடியும் என்று கூறினார். அவர் பிரதான சந்தேக நபராகக் கருதப்பட்டாலும், நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் பெண்களின் சாட்சியங்கள் ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.. உடல் ரீதியான வன்முறை, கற்பழிப்பு மற்றும் புறக்கணிப்பு ஆகிய கொடுமைகளை அனுபவித்ததாக தெரிவித்தனர்..
இந்த விஷயம் பல ஆண்டுகளாக வெளிச்சத்திற்கு வராமலே இருந்தது… ஆரம்ப கொலைகள் 1911 இல் தொடங்கியதாக போலீஸ் பதிவுகள் காட்டுகின்றன. ஆனால் முறையான விசாரணை 1929 இல் மட்டுமே தொடங்கியது.
கொலைகள் எப்படி வெளிச்சத்திற்கு வந்தன?
சோசானா ஃபஸ்காஸ் 1911 இல் நாகிரேவ் கிராமத்திற்கு வந்தார். அவருக்கு மருத்துவம் தவிர, ரசாயன கலவைகள் உள்ளிட்ட மருந்துகள் பற்றிய அறிவு அவருக்கு இருந்தது. அவரின் மருத்துவ அறிவு காரணமாக மக்கள் அவரை முழுமையாக நம்பினர்.. வீடுகளுக்குள் நடக்கும் பல தொந்தரவான சம்பவங்களுக்கு அவர் சாட்சியாக மாறினாள், ஆண்கள் தங்கள் மனைவிகளை துன்புறுத்துவது , பாலியல் பலாத்காரம் செய்வது ஆகியவை அதில் அடங்கும்..
அந்தக் காலத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு நடைமுறையாக இருந்த கருக்கலைப்புகளை சோசானா செய்யத் தொடங்கினார். இதன் விளைவாக அவள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டார். இருப்பினும் அவருக்கு ஒருபோதும் தண்டனை கிடைக்கவில்லை.
அப்போது பெரும்பாலான திருமணங்கள் குடும்பங்களால் ஏற்பாடு செய்யப்பட்டன, பெரும்பாலும் இளம் பெண்கள் மிகவும் வயதான ஆண்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர்.. அந்த காலக்கட்டத்தில் விவாகரத்து என்பது சாத்தியமற்றது. கணவர் செய்யும் கொடுமைகளில் இருந்து தப்பிக்க, பெண்கள் சட்டப்பூர்வ வழி எதுவும் இல்லை.. எனவே பெண்கள், துஷ்பிரயோகம் மற்றும் சுரண்டலைத் தாங்கிக் கொண்டனர்.
சோசானா ஃபஸ்காஸ் பெண்களின் நம்பிக்கையை பெற தொடங்கினார்.. குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் கஷ்டங்களைத் தீர்க்க முடியும் என்று உறுதியளித்தார். 1911 இல் விஷம் கொடுத்து ஆண்களை கொல்லத் தொடங்கினார்.. இது பல ஆண்டுகள் தொடர்ந்தது.. குறிப்பாக முதலாம் உலகப் போரின் போது மற்றும் ஆஸ்ட்ரோ-ஹங்கேரிய பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, கொலை சம்பவங்கள் அதிகரித்தன.
18 ஆண்டுகளுக்குள், 45 முதல் 50 ஆண்கள் இறந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் கணவர்கள், தந்தைகள் மற்றும் உறவினர்கள் அடங்குவர். அனைவரும் கிராம கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டனர். பலர் நாகிரே கிராமாத்தை “கொலையாளிகளின் நகரம்” என்று அழைக்கத் தொடங்கினர்.
அதிகாரிகள் இதை கவனித்தனர், 1929 ஆம் ஆண்டின் முற்பகுதியில், உடல்களை தோண்டி எடுக்கும் பணிகள் தொடங்கின. உடல்களில் ஆர்சனிக் விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சோசானா ஃபஸ்காஸ் ஒரு ஒற்றை மாடி வீட்டில் வசித்து வந்தார், அங்கு மரண தண்டனைக்கு பயன்படுத்தப்பட்ட பல விஷக் கரைசல்களைத் தயாரித்தார்.
ஜூலை 19, 1929 அன்று, போலீசார் அவரை கைது செய்ய வந்தனர். ஆனால் அவர் தான் தயாரித்த விஷத்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டாள். இந்த விவகாரத்தில் சோசோனோக்கைச் சேர்ந்த 26 பெண்களைக் கைது செய்ய வழிவகுத்தன. இவர்களில் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.. 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிலர் குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான நோக்கங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
நீதிமன்ற ஆவணங்களை மதிப்பாய்வு செய்த சோசோனோக்கைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் டாக்டர் கெசா செக், பல கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை என்று கூறினார். வறுமை, பேராசை மற்றும் விரக்தி ஆகிய காரணங்கள் பெண்கள் தங்கள் கணவர்களை கொலை செய்திருக்கலாம் என்று கூறினார்..
பல பெண்கள் வயல்களில் வேலை செய்த ரஷ்ய போர்க் கைதிகளுடன் உறவு வைத்திருந்ததாக கூறப்பட்டது.. இந்த ஆண்கள் வீடு திரும்பியபோது, பெண்கள் புதிதாகக் கிடைத்த சுதந்திரங்களை இழந்துவிட்டதாக உணர்ந்தனர்.. எனவே தங்கள் கணவரை கொல்ல முடிவு செய்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்..
1950களில், வரலாற்றாசிரியர் ஃபெரெங்க் கெரோகேவ் ஒரு வயதான கிராமவாசியைச் சந்தித்தார், அவர் நாகிரவ் பெண்கள் பழங்காலத்திலிருந்தே தங்கள் ஆண்களைக் கொன்று வருவதாகக் கூறினார். அருகிலுள்ள திஸ்ஸகுர்ட் நகரத்தில் தோண்டப்பட்ட கல்லறைகளிலும் ஆர்சனிக் விஷம் இருப்பது தெரியவந்தது, ஆனால் அந்த இறப்புகளுக்கு யாரும் தண்டிக்கப்படவில்லை. இப்பகுதியில் மொத்த ஆர்சனிக் விஷம் கொடுக்கப்பட்டதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300-ஐ கடந்திருக்கலாம் என்று அதிர்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன..