நாட்டில் பல இந்திய மொழிகளில், பெரும்பாலான மாநிலங்களில் 380-க்கும் அதிகமான தனியார் பண்பலை அலைவரிசைகள் உள்ள நிலையில், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், தனியார் பண்பலை வானொலி நிலையங்களின் மூலம் ஒலிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான புதிய கட்டணங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டணக் கட்டமைப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தனியார் பண்பலை வானொலி நிலையங்களுக்கான நியாயமான மற்றும் நிலையான கட்டணக் கட்டமைப்பை உறுதி செய்வதற்கான அமைச்சகத்தின் தற்போதைய முயற்சிகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்
டிசம்பர் 2015 முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்தில் அதிகரித்த இயக்க செலவைக் கருத்தில் கொண்டு 2023 செப்டம்பர் மாதத்தில் அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய விகிதங்களின் படி, அடிப்படைக் கட்டணத்தில் 43 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. இந்த அதிகரிப்பின் மூலம், பண்பலை வானொலி விளம்பரத்திற்கான மொத்த அடிப்படை விகிதம் பத்து வினாடிகளுக்கு 52 ரூபாயிலிருந்து 74 ரூபாயாக உயரும். இது தற்போதைய சந்தை விகிதங்களுடன் சமநிலையை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மொத்த அடிப்படை வீதத்தின் அதிகரிப்பு நாட்டில் தற்போது செயற்படும் 400 க்கும் மேற்பட்ட சமூக வானொலி நிலையங்களுக்கும் நன்மை பயக்கும்..
அடிப்படை விகிதத்தை மேலும் வலுப்படுத்தி, நகர வாரியான விகிதங்களைக் கணக்கிடுவதற்கு தற்போதுள்ள கட்டண நிர்ணய முறையை தொடர அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தனியார் பண்பலை வானொலி நிலையங்களுக்கான கட்டண கட்டமைப்புக் குழு கடந்த ஆண்டு தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்டது, இது கடைசியாக 2015ம் ஆண்டில் திருத்தப்பட்ட புதிய கட்டணங்களை மதிப்பீடு செய்து பரிந்துரைத்தது.