இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் இந்த பிரச்சனை வருமா..? உயிருக்கே ஆபத்தாம்..!! விளைவுகள் எப்படி இருக்கும் தெரியுமா..?

Meat 2025

உணவு என்பது பசிக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உணவு முறைகள் தவறாக இருந்தால், அது தீமைகளை உண்டாக்கும். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம், இது தொடர்பான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், முழுமையாக சமைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்ணும் பழக்கத்தில் இருந்துள்ளார். பனியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும், மென்மையாக சமைக்கப்பட்ட இறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் கடுமையான தலைவலியால் அவதிப்படத் தொடங்கினார்.


தலைவலியை ஆரம்பத்தில் சாதாரணமானதாக நினைத்து பொருட்படுத்தாத அவர், பின்னர் வலியின் தீவிரம் அதிகமானதால் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு எடுக்கப்பட்ட மூளை ஸ்கேன் ரிப்போர்ட், தன்னை மட்டுமல்ல மருத்துவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மூளையில் பல சிறிய புண்கள், நரம்புகளின் செயல்பாடுகளை பாதிப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

தொடர்ந்த சோதனைகளின் பின்னர், அவரின் உடலில் நாடாப்புழு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. “டேனியா சோலியம்” எனப்படும் இந்த ஒட்டுண்ணிகள், பொதுவாக சமைக்கப்படாத பன்றி இறைச்சியின் வாயிலாக உடலில் புகுந்து, மூளையை தாக்கும் தன்மை கொண்டவை. இத்தகைய தொற்று, நியூரோசிஸ்டிசெர்கோசிஸ் (Neurocysticercosis) எனப்படும் கடுமையான நரம்பியல் நோயாக மாறக்கூடும்.

அந்த நபர், அதிர்ஷ்டவசமாக சிகிச்சையை நேரத்தில் பெற்றதால் உயிரை காப்பாற்றிக் கொண்டார். ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட அவர், ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மூளையில் உள்ள அழற்சியை குறைக்கும் மருந்துகள் வழங்கப்பட்டதால், சில வாரங்களுக்குப் பிறகு நிலைமையை கட்டுப்படுத்த முடிந்தது. உணவின் சமைப்பு முறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை இது மேலும் வலியுறுத்துகிறது.

பாதுகாப்புக்கான எச்சரிக்கைகள் :

* பன்றி இறைச்சியை குறைந்தபட்சம் 63 டிகிரி செல்சியஸ் (145°F) வெப்பநிலையில் முழுமையாக சமைத்த பிறகே உண்ண வேண்டும்.

* இறைச்சி வெட்டும் பலகைகள், கத்திகள் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

* கைகளை தொடர்ந்து கழுவ வேண்டும், குறிப்பாக இறைச்சி தொடும் வேளைகளில்.

* வெளியூரில் சாப்பிடும்போது, உணவகம் சுத்தமான இடமா? உணவு முறைகள் நியாயமானவையா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

Read More : மக்களே சூப்பர் வாய்ப்பு..!! உங்கள் ரேஷன் கார்டின் வகையை மாற்ற வேண்டுமா..? இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!!

CHELLA

Next Post

தமிழ்நாடு தான் பவர்ஹவுஸ்.. திமுக அரசை பழிக்கும் அனைவருக்கும் பா.ஜ.க. அரசே தந்துள்ள 'நெத்தியடி பதில்'! - முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்!

Thu Aug 28 , 2025
தமிழ்நாடு – இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல! மிகப்பெரிய தொழில்துறை தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ இந்திய அரசின் 2023–24 ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பின்படி, இன்று வெளியிடப்பட்டது, தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் 15.24% பேர் உள்ளனர்! இது நாட்டின் […]
stalin amit shah

You May Like