மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.. இதையடுத்து விமானம் ரன்வேயில் இருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இந்த விமானத்தில் சுமார் 130 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது..
தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விமான குழுவினர் முயன்றனர்.. எனினும் நீண்ட நேரமாக இந்த கோளாறை சரி செய்ய முடியாததால், பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள வளாகத்திற்குள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.. தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட பின் விமானம் மீண்டும் புறப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
கடந்த 25-ம் தேதி மதுரையில் இருந்து துபாய் செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமான சுமார் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.. இந்த நிலையில் மதுரை – துபாய் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் மீண்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர்..
Read More : அண்ணாமலையை இடியட் என விமர்சித்த டி.ஆர். பாலு..! ரூ.10,000 கோடி சொத்து குறித்த கேள்வியால் கோபம்!