இளைஞர்களும், பெண்களும் தங்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளும் நோக்குடன், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு தொழில் பயிற்சி மற்றும் ஊக்கத்திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இப்போது சென்னையில் நடத்தப்படவுள்ள பயிற்சி நிகழ்வு, ஆர்வமுள்ள தொழில்முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளைக் உருவாக்கியுள்ளது.
சென்னையில் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த 3 நாள் பயிற்சி, காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது. இதில் பங்குபெறும் பயனாளிகள், தனித்துவமான பேக்கரி தயாரிப்பு முறைகளை கற்றுத்தரப்படுகிறது.
தினை பால் பிஸ்கட், ராகி நட்ஸ் குக்கீ, கம்பு நெய் பிஸ்கட், கருப்பு கவுனி பாதாம் குக்கீ, சோளம் சாக்லேட் பிஸ்கட், ராகி சாக்லேட் கேக், சோளம் கேரட் கேக் உள்ளிட்ட பல வகையான ஹெல்தி ஸ்நாக்ஸ் மற்றும் ரொட்டிகள் இதில் இடம் பெற்றுள்ளன. ஆரோக்கியம் சார்ந்த உணவுப் பொருட்களில் தொழில்முனைவோர்கள் ஆர்வம் காட்டும் இந்த சூழலில், இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த பயிற்சி, தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் (EDII-TN) தலைமையில் நடத்தப்படுகிறது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இதில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள். பயிற்சியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு அவசியம், மேலும் பங்கேற்பாளர்களுக்கு அரசு சான்றிதழும் வழங்கப்படும்.
இதனுடன், அரசு அளிக்கும் உதவிகள், மானியங்கள், மற்றும் தொழில்முனைவோர்களுக்கான வழிகாட்டுதல்கள் குறித்தும் பயிற்சியின் போது விளக்கங்கள் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்கும் பயனாளிகள் விரும்பினால், குறைந்த கட்டணத்தில் தங்கும் வசதியும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சிக்கான விவரங்கள் www.editn.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன. நேரடியாக தொடர்பு கொள்ள விரும்புவோர் 86681 02600 அல்லது 70101 43022 என்ற எண்களில் அலுவலக வேலை நேரத்தில் தொடர்பு கொள்ளலாம். தனி முயற்சியுடன் தொழிலில் வெற்றி காண விரும்பும் இளைஞர்களும் பெண்களும் இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.
Read More : நடிகர் விஷால் – சாய் தன்ஷிகா திருமணம் என்ன ஆச்சு..? இன்னைக்கு தான் அந்த தேதி..!! வெளியான குட் நியூஸ்..!!