சென்னை நீலாங்கரையில் திமுக எம்.பி என்.ஆர். இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார்.. திருமணத்தை நடத்தி மணக்களை வாழ்த்திய அவர் இந்த விழாவில் சிறப்புரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ அவர்களின் இல்லத்திருமன விழாவை தலைமையேற்று நடத்தி மணமக்களை வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.. கலைஞர் மீது, என் மீது, கழகத்தின் மீது பற்றுக்கொண்டு என்.ஆர். இளங்கோவன் தொடர்ந்து கழக்கத்திற்காக பணியாற்றிக் கொண்டிருப்பவர்..
இன்று நாடு என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர் கொண்டு வருகிறது என்பதை நாம் நன்கு அறிவோம்.. பீகாரில் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு வாக்காளர் திருத்தம் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி உள்ளது.. அதற்காக தான் அருமை சகோதரர் ராகுல்காந்தி விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.. நானும் 2 நாட்களுக்கு முன்பு பீகார் சென்று ராகுல்காந்தி பயணத்தில் பங்கேற்றேன்.. இந்த நிலை தமிழ்நாட்டிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்போது நாம் தயாராக வேண்டும்..
நாளைய தினம், ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு ஒரு வார காலம் பயணம் மேற்கொள்ள உள்ளேன்.. திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாட்டிற்கு சுமார் 10 லட்சம் மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம். இந்த பயணத்தில் என்ன திட்டம் என்பதை நாளை தினம் பத்திரிகையாளர்களை சந்தித்து கூற உள்ளேன்..
தமிழ் சமுதாயம் சுயமரியாதை உடன் தலைநிமிர்ந்து நடைபோட காரணம் பெரியார்.. உலகின் மிகப்பெரிய அறிஞர்களை தந்திருக்கும் புகழ்மிக்க ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவ படம் திறக்கப்பட உள்ளது. அதனை நான் திறந்து வைக்க இருக்கிறேன்.. தந்தை பெரியார் வலியுறுத்திய சுயமரியாதை, பகுத்தறிவு, பெண் விடுதலை, அனைவரும் சமம் ஆகிய கருத்துகளை உலக மக்கள் அனைவரும் பொதுவாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.. அப்படிப்பட்ட அறிவு மேதை உலகளவில் அங்கீகரிக்கப்படுவது நம் தமிழ்நாட்டிற்கு பெருமை..” என்று தெரிவித்தார்..
Read More : வருவாய்த் துறையில் அலுவலக உதவியாளர் பணியிடங்கள்.. உடனே நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு..!!