Video : விமான கண்காட்சி ஒத்திகையில் F-16 போர் விமானம் விபத்து.. விமானி பலியான சோகம்! நிகழ்ச்சி ரத்து!

poland fighter jet crash

நேற்று மத்திய போலந்தின் ராடோமில் நடந்த ஒரு விமான கண்காட்சிக்கான ஒத்திகையின் போது போலந்து விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது.. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ராடோம் விமான கண்காட்சி ரத்து செய்யப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.


நேற்று மாலை சுமார் 5.30 மணியளவில் விமானம் ஓடுபாதையில் விழுந்து சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஆடம் ஸ்லாப்கா, விமானியின் மரணத்தை உறுதிப்படுத்தினார், மேலும் பாதுகாப்பு அமைச்சர் Władysław Kosiniak-Kamysz விபத்து நடந்த இடத்திற்குச் சென்று கொண்டிருந்தார் என்றும் கூறினார். இந்த விமான விபத்து தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளில் வெளியாகி உள்ளன.. அதில், விமானம் தரையில் மோதியபோது தீப்பிடித்து எரிந்ததை காணலாம்..

போலந்து பாதுகாப்பு அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த விபத்தில் உயிரிழந்த விமானிக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. அவரின் பதிவில் “F-16 விபத்தில், போலந்து இராணுவ விமானி ஒருவர் இறந்தார், அவர் தாய்நாட்டிற்கு எப்போதும் அர்ப்பணிப்புடனும் மிகுந்த தைரியத்துடனும் சேவை செய்த அதிகாரி. அவரது நினைவாக நான் அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது விமானப்படைக்கும் முழு போலந்து இராணுவத்திற்கும் பெரும் இழப்பாகும்” என்று அவர் எழுதினார்.

ராடோ விமானக் கண்காட்சி ரத்து

இந்த விமான விபத்தை தொடர்ந்து, வார இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ராடோம் விமானக் கண்காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பாதுகாப்பு அமைச்சர், விமானியை கௌரவித்தார், அர்ப்பணிப்புடனும் தைரியத்துடனும் தனது நாட்டிற்கு சேவை செய்த அதிகாரி என்று அவரை விவரித்தார்.

RUPA

Next Post

பெற்றோர்களே..!! குழந்தைகளுக்கு சன்ஸ்கிரீன் தடவினால் ஆபத்தா..? இதுதான் பெஸ்ட்..!! மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ்..!!

Fri Aug 29 , 2025
குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையானதும், சென்சிடிவானதும் என்பதால், யூவி கதிர்களின் தாக்கத்திற்கு இளமையிலேயே ஆளாகும் வாய்ப்பு அதிகம். வெயிலில் ஓடித் திரியும், விளையாடும் வயதிலுள்ள குழந்தைகளை வெளிப்படையாகப் பாதிக்கும் இந்த கதிர்களால், எதிர்காலத்தில் தோல் சார்ந்த பிரச்சனைகள் உருவாகும் அபாயம் உண்டு என சரும நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதன் அவசியத்தைப் பற்றி டெர்மடாலஜிஸ்ட் டாக்டர் எமிலி ஹாரிஸ் பேசுகையில், “SPF 30 அல்லது அதற்கும் மேல் பாதுகாப்பளிக்கும் சன்ஸ்கிரீன்களை […]
Sunscreen 2025

You May Like