“மாதம்பட்டி ரங்கராஜ் என்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார்..” ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார்!

Madhampatty Rangaraj 2025

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை 2வது திருமணம் செய்து கொண்டதாக் ஜாய் கிரிசில்டா கூறியிருந்த நிலையில் தற்போது புதிய குண்டை தூக்கி போட்டுள்ளார்..

பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் தான் தற்போது சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக உள்ளார். யூ டியூப், இன்ஸ்டா, ட்விட்டர் என எங்கு சென்றாலும் மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம் குறித்த விவாத தான் நடந்து வருகிறது.. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜோய்கிரிசில்டா, ரங்கராஜுடன் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாக போட்ட பதிவு தான் இதற்கு காரணம்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜோய் கிரிசில்டா கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..


மாதம்பட்டி ரங்கராஜ் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டாரா? 2வது திருமணம் செல்லுபடியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. மேலும் மாதம்பட்டி ரங்கராஜின் திருமணம் மிரட்டப்பட்டு நடந்ததாகவும், அவர் விரைவில் சிறைக்கு செல்வார் என்றும் சிலர் கூறி வருகின்றனர்..

எனினும் மாதம்பட்டி ரங்கராஜ் இதுகுறித்து இன்னும் எந்த கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறார்.. இந்த திருமணம் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. ஜோய்கிரிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஸ்ருதி இது குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்…

இப்படி ரங்கராஜும், ஸ்ருதியும் மௌனம் காத்து வரும் நிலையில், ஜோய்கிரிசில்டா மட்டும் புகைப்படங்களையும், மகிழ்ச்சிப் பதிவுகளையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். மேலும் ரங்கராஜுடன் ஜாய் கிரிசில்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வந்தது.. இதனால் மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது..

இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா குற்றம்சாட்டி உள்ளார்.. சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ் தற்போது தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.. 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழும்படி அவரிடம் மன்றாடி வருவதாகவும் ஜாய் கிரிசில்டா தெரிவித்துள்ளார்.. ரங்கராஜிடம் இதுகுறித்து கேட்ட போது, தன்னை தாக்கியதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.. இதுகுறித்து சென்னை காவல் ஆணையகரத்தில் அவர் புகாரளித்துள்ளார்.

Read More : கோமாவில் இருந்து எழுந்த ஈஸ்வரி.. அரண்டு போன ஆதி குணசேகரன்..!! எதிர்நீச்சல் கதையில் திருப்பம்..

RUPA

Next Post

இதுதான் திமுக அரசின் அடையாளம்; மக்களின் குறைகளை கூட குப்பை போல தூக்கி எரிஞ்சுட்டாங்க.. வீடியோ பதிவிட்டு அண்ணாமலை காட்டம்..

Fri Aug 29 , 2025
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.. இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தண்ணீரில் மிதந்து வந்ததாக தகவல் வெளியானது.. சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதை […]
tn cm stalin annamalai

You May Like