உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தமிழக அரசு கூறியிருந்தது.. இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் தண்ணீரில் மிதந்து வந்ததாக தகவல் வெளியானது.. சிவகங்கை மாவட்டம் வைகை ஆற்றில் மனுக்கள் மிதப்பதை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.. இதையடுத்து ஆற்றுப்பகுதிக்கு வந்த போலீசார், மனுக்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. மேலும் ஆற்றில் வீசப்பட்டு மனுக்களுக்கு இன்னும் உரிய தீர்வு காணப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது..
இதுகுறித்து தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தமிழக அரசை விமர்சித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ திட்டங்களுக்கு கவர்ச்சியான பெயர்களை வைத்திருப்பதும், வரி செலுத்துவோரின் பணத்தை விளம்பரத்திற்காக வீணாக்குவதும் இந்த பேட்ச் ஒர்க் மாடல் திமுக அரசாங்கத்தின் அடையாளமாக மாறிவிட்டது.
சமீபத்தில் தொடங்கப்பட்ட “உங்களுடன் ஸ்டாலின் திட்டம்” என்று அழைக்கப்படும் திட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வைகை ஆற்றில் மிதக்கும் குறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மனுக்களின் தொகுப்பு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இப்போது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில், திமுகவின் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதிகள் சாக்கடைக்குள் போய்விட்டன, இன்று, மக்களின் குறைகள் கூட குப்பைகளைப் போல வீசப்படுகின்றன.” என்று குறிப்பிட்டுள்ளார்..
Read More : குஷியில் இபிஎஸ்.. அதிமுக கட்சி விதிகள் திருத்தம்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..