உத்தரப்பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அந்த பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், இளம்பெண்ணுக்கு வேறொரு இளைஞருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
அடிக்கடி செல்போனில் பேசி தங்களது கள்ளக்காதலை வளர்த்து வந்துள்ளனர். மேலும், இருவரும் வெளியே சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும், பலமுறை வீட்டில் இருந்து அந்த இளம்பெண் கள்ளக்காதலுடன் ஓடிச் சென்றார். ஆண்டுக்கு 10 முறை கள்ளக்காதலனுடன் தலைமறைவான இவரை, ஒவ்வொரு முறையும் கணவர் மற்றும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
ஆனாலும், தனது கள்ளக்காதலனை கைவிட முடியாமல், தொடர்ந்து அந்த இளைஞருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இதனால், கணவன் – மனைவிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. தொடர்ந்து சண்டை வந்ததால், குடும்பத்தினர் சார்பாக கிராம பஞ்சாயத்துக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில், அந்த இளம்பெண், “ஒரு மாதத்தில் 15 நாட்கள் கள்ளக்காதலனுடன் தங்க அனுமதி வழங்க வேண்டும். அப்படியென்றால் தான், மீதமுள்ள 15 நாட்கள் என் கணவருடன் வாழ்வேன்” என்று கூறியுள்ளார்.
இளம்பெண்ணின் முடிவை கேட்ட குடும்பத்தினர் மற்றும் கிராமத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பலரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தனது நிலைப்பட்டை அந்தப் பெண் மாற்றிக்கொள்ளவில்லை. இதனால் மனமுடைந்த கணவர், மனைவியை விட்டு பிரிவதாகவும், அவர் கள்ளக்காதலனுடனே இருக்கட்டும் என விலகிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தான் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.