ரூ.24,000 டெபாசிட் செய்தால் ரூ.11 லட்சம் கிடைக்கும்.. பணம் கொட்டும் சூப்பரான சேமிப்பு திட்டம்!

1180584 untitled design 2023 04 08t154622.251

பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க மத்திய அரசு செயல்படுத்தி வரும் சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) திட்டம் மக்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், பெற்றோர் ஒவ்வொரு ஆண்டும் சிறிய தொகையை சேமித்து முதலீடு செய்தால், கணக்கு முதிர்ச்சியடையும் போது லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்.


அரசு வழங்கும் இந்தச் சிறப்பு சேமிப்பு திட்டத்தில் வருடத்திற்கு ரூ.24,000 முதலீடு செய்தால், 20 ஆண்டுகளில் சுமார் ரூ.11.8 லட்சம் வருமானம் கிடைக்கும் என கணக்கீடு கூறுகிறது. மத்திய அரசு அறிமுகப்படுத்திய சிறு சேமிப்பு திட்டம் இது. நாட்டின் எந்த தபால் நிலையத்திலும் தொடங்கலாம். ஏழைக் குடும்பங்களும் எளிதாக முதலீடு செய்யும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளுக்கே கணக்கு திறக்க அனுமதி உண்டு.

திட்டத்தின் சிறப்புகள்:

* வருடத்திற்கு அதிகபட்ச வட்டி விகிதம் சுமார் 8.20%

* கூட்டு வட்டியின் பலனுடன் அதிக வருமானம்

* வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C-இன் கீழ் ஆண்டு ரூ.1.5 லட்சம் வரை வரிச்சலுகை

* குறைந்தபட்ச முதலீடு ரூ.250, அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை

* கணக்கை நாட்டின் எந்த தபால் நிலையத்திற்கும் மாற்றிக்கொள்ளலாம்

2025ஆம் ஆண்டில் மகளுக்காக SSY கணக்கு தொடங்கி, ஆண்டுதோறும் ரூ.24,000 சேமித்து 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், மொத்த முதலீடு ரூ.3.6 லட்சமாகும். இதற்கு வட்டி ரூ.7.48 லட்சம் சேர்ந்து, 2044-ல் கணக்கு முதிர்ச்சியடையும் போது ரூ.11.8 லட்சம் கிடைக்கும்.

தேவையான ஆவணங்கள்

  • SSY கணக்கு திறப்பு படிவம்
  • பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்
  • பெற்றோர்/பாதுகாவலரின் அடையாளச் சான்று, முகவரிச் சான்று
  • ஆதார், பாஸ்போர்ட், FATCA படிவம்
  • தேவையான இடங்களில் கூடுதல் பிறப்புச் சான்றிதழ்

கணக்கைத் திறக்கும் நடைமுறை

  • தபால் நிலையத்தில் SSY படிவத்தை நிரப்பவும்
  • தேவையான ஆவணங்களையும் புகைப்படங்களையும் சமர்ப்பிக்கவும்
  • முதலீட்டு தொகையை செலுத்தவும்
  • நிலையான அறிவுறுத்தல் (Standing Instruction) மூலம் அல்லது நெட்பேங்கிங் வசதியால் ஆண்டு தவணை செலுத்தலாம்.

Read more: என்னது.. ராமதாஸுக்கு 2வது மனைவியா? யார் இந்த சுசீலா? வைரல் போட்டோவால் பாமகவில் புதிய பூகம்பம்!

English Summary

If you deposit Rs. 24,000, you will get Rs. 11 lakh.. A super savings plan that will pay off!

Next Post

#Breaking : ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை! ரூ.76,000-ஐ கடந்ததால் ஷாக்கில் நகைப்பிரியர்கள்!

Fri Aug 29 , 2025
உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார […]
gold diamond etonline 1

You May Like