தூத்துக்குடி எட்டையபுரத்தில் நடந்த பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்..
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் இனாம் அருணாசலபுரம் – தோமாலைபட்டி அருகே உள்ள ஜாஸ்மின் என்ற பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.. இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமான நிலையில், ஒருவர் உடல் கருகி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து தகவல் கிடைத்த நிலையில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்..
உடல் கருகிய நிலையில் கிடந்த ஒரு ஆணின் சடலத்தை தீயணைப்பு துறையினர் கைபற்றி உள்ளனர்.. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 35 பேர் சிக்கி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.. மீட்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னரே இதில் எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற விவரம் தெரியவரும்.. நீண்ட நேரம் போராடிய பின்னரே தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.. அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Read More : அஸ்தியை போல் கரைக்கப்பட்டு.. மீண்டும் குப்பையாக்கப்பட்ட மனுக்கள்.. கொந்தளித்த இபிஎஸ் ..



