விஜய்யின் அரசியல் வருகை.. திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டியா? ஓரே வரியில் முதல்வர் சொன்ன ‘நச்’ பதில்!

TVk vijay stalin

விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதிலளித்துள்ளார் தெரியுமா?

முதல்வர் மு.க ஸ்டாலின் அரசு முறை பயணமாக ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு இன்று புறப்பட்டு சென்றார்.. அதற்கு முன் அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது தமிழ்நாட்டை நோக்கி தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்..


தொடர்ந்து பேசிய அவர் வெளிநாட்டு பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.. அவர் சென்ற போது வெளிநாட்டு பயணங்கள் எப்படி இருந்ததோ அப்படி தான் எனது பயணமும் இருக்கும் என்று நினைக்கிறார்.. ஆனால் நான் கையெழுத்துப் போடும் அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறைக்கு வந்துள்ளது. திமுகவை நோக்கி புதிய கட்சிகள் வருகின்றனவோ, இல்லையோ புதிய வாக்காளர்கள் திமுக பக்கம் வந்து கொண்டிருக்கிறார்கள்..” என்று தெரிவித்தார்..

அப்போது செய்தியாளர்கள் பீகாரில் வாக்குத் திருட்டு நடந்ததாக கூறி ராகுல்காந்தி பேரணி செல்லும் நிலையில் தமிழ்நாட்டின் நிலை குறித்து முதல்வரிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த முதல்வர் யார், எப்படிப்பட்ட சதி செய்தாலும், அதை முறியடிக்கும் வல்லமை தமிழ்நாட்டிற்க் உண்டு.. பீகாரைப் போன்று தமிழ்நாட்டில் வாக்குத் திருட்டை என்றும் அனுமதிக்க மாட்டோம்.. பீகாரிலும் கூட தேர்தல் ஆணையம் நினைத்தது நடக்காது.. ஏன்னா மக்கள் எழுச்சி பெற தேர்தல் ஆணையம் உதவி செய்துள்ளது என்பது தான் உண்மை” என்று கூறினார்..

சி வோட்டர் கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் “ எந்த கருத்துக்கணிப்பு வந்தாலும், எல்லா கருத்துக்கணிப்புகளையும் மிஞ்சி ஒரு அமோக வெற்றியை தான் திமுக பெறப் போகிறது.. அதில் எந்த சந்தேகமும் இல்லை..” என்று தெரிவித்தார்..

தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அதுகுறித்து சொல்ல வேண்டிய அவசியமில்லை..” என்று கூறினார்.. 2026 தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி என்று விஜய் கூறியது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் “ நான் அதையும் பேச மாட்டேன்.. இதுக்கெல்லாம் பேச வேண்டிய அவசியமும் இல்லை.. பேச்சை குறைத்து செயலில் நமது திறமையை காட்டணும் அவ்வளவு தான் எனது கொள்கை..” என்று தெரிவித்தார்..

Read More : “இதுக்காக தான் ஜெர்மனி, இங்கிலாந்து செல்கிறேன்..” லிஸ்ட் போட்டு சொன்ன முதல்வர் ஸ்டாலின்..

RUPA

Next Post

உலகின் 5 கோடீஸ்வர ராணிகள்! தலை சுற்ற வைக்கும் சொத்து! நீதா அம்பானிலாம் கிட்ட கூட நெருங்க முடியாது!

Sat Aug 30 , 2025
இன்றைய கோடீஸ்வர பெண்கள் என்றாலே, ​​நீதா அம்பானி, ராதிகாராஜே கெய்க்வாட் மற்றும் சாவித்ரி ஜிண்டால் போன்ற பெயர்கள் நம் நினைவுக்கு வரும். ஆனால் வரலாற்றை நாம் பின்னோக்கிப் பார்த்தால், இன்றைய கோடீஸ்வரர்கள் கூட கனவு காண முடியாத அளவுக்கு செல்வமும் வாழ்க்கை முறையும் கொண்ட ராணிகள் இருந்தனர். இந்தப் பெண்கள் பரந்த பேரரசுகளை ஆண்டனர், விலைமதிப்பற்ற பொக்கிஷங்களை வைத்திருந்தனர். தங்க அரண்மனைகள் மற்றும் அரிய நகைகள் முதல் மகத்தான அரசியல் […]
world richest queens

You May Like