பாலிவுட்டில் மிகவும் வெற்றிகரமான, பணக்கார நடிகைகளில் ஒருவராகக் கருதப்படும் தீபிகா படுகோன், தனது 18 ஆண்டுகால திரை வாழ்க்கையில் உலகளாவிய அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தனது சக்திவாய்ந்த நடிப்பு மற்றும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்திற்கு பெயர் பெற்ற அவர், இன்று நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்குச் சொந்தக்காரராக உள்ளார். ஆனால் அவரது பயணம் மிகவும் சாதாரண வருமானத்துடன் தொடங்கியது.
பாலிவுட்டில் நுழைவதற்கு முன்பு, தீபிகா ஒரு மாடலாக பணியாற்றினார், மேலும் பின்னணி மாடலாகவும் தோன்றினார். தனது முதல் மாடலிங் பணிக்கு, அவர் ரூ. 2,000 மட்டுமே சம்பளம் பெற்றார். ஆனால் தற்போது இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறிய மாறி உள்ளார்..
பெங்களூருவில் பிறந்து விளையாட்டுப் பின்னணியில் வளர்ந்த தீபிகா, மாடலிங் மற்றும் திரைத்துரையில் நுழைவதற்கு முன்பு தனது தந்தை பிரகாஷ் படுகோனின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாக இருந்தார்.
தீபிகா 2006 இல் கன்னடத் திரைப்படமான ஐஸ்வர்யா என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இருப்பினும், 2007 இல் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஓம் சாந்தி ஓம் படம் அவரின் திரை வாழ்க்கையில் ஒரு பிரேக் த்ரூ படமாக அமைந்தது.. இது ஒரு பிளாக்பஸ்டராக மாறியது.. மேலும் இதை தொடர்ந்து தீபிகா படுகோனுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.. குறுகிய காலத்திலேயே பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார்..
ராஸ்லீலா ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி, பிகு, ஹேப்பி நியூ இயர், ஹவுஸ்ஃபுல், பதான், மற்றும் கல்கி 2898 AD போன்ற பல பிளாக் பஸ்டர் வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். இன்று, தீபிகா ஒரு படத்திற்கு ரூ.15 முதல் 20 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தீபிகாவின் சொத்து மதிப்பு ரூ.500 கோடியாக உள்ளது, இது அவரை பாலிவுட்டின் பணக்கார நடிகைகளில் ஒருவராக ஆக்குகிறது.