fbpx

பெரும் சோகம்..!! தமிழக முன்னாள் கிரிக்கெட் வீரரும் பிசிசிஐ நடுவருமான கோகுல கிருஷ்ணன் திடீர் மரணம்..!!

முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ போட்டிகளின் நடுவருமான D.J. கோகுல கிருஷ்ணன் தனது 50-வது வயதில் காலமானார்.

பவுலிங்-ஆல் ரவுண்டரான இவர், தமிழ்நாடு, அசாம், கோவா ஆகிய அணிகளுக்காக உள்ளுர் போட்டிகளில் விளையாடி, 174 விக்கெட்டுகளையும், 4 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ரஞ்சி, டிஎன்பிஎல், விஜய் ஹசாரே கோப்பைகளுக்கு நடுவராகவும், 2008-2015 வரை தமிழக அணிக்கு பயிற்சியாளராகவும் தனது கடமையை ஆற்றியுள்ளார்.

இவர், 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அணியில் உதவிப் பயிற்சியாளராக இரண்டு முறை பணியாற்றினார். 2010இல், அவர் அவர்களின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றினார். 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு U-19 அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்தார். இந்நிலையில், இவரது மறைவுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

வேங்கை வயல் விவகாரத்தில் நடந்தது என்ன….? உண்மை வெளியாகுமா….!

Thu Oct 12 , 2023
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியில், இறையூர் என்ற கிராமத்தில் உள்ள வேங்கை வயல் என்ற தெருவில், சுமார் 50க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகிறார்கள். அந்த பகுதியில், அந்த மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக குடிநீர் நீர்த்தேக்க தொட்டி ஒன்று பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான், சென்ற வருடம் அந்த பகுதியைச் சேர்ந்த 5 சிறுவர், சிறுமிகளுக்கு திடீரென்று உடல்நல குறைவு உண்டானது. இதனைத் […]

You May Like