திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் கிராமத்தில் 43 வயதான ரெஜினா என்பவர், பல ஆண்டுகளாக தனது இரு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்தார். அவரது கணவர் பாண்டி, உடல்நலக்குறைவால் காலமான பிறகு, குடும்பப் பொறுப்பை ஏற்று ரெஜினா தனது மகன்களை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், அக்கம் பக்கத்தில் வசிக்கும் மாசானமுத்து என்பவருடன் ரெஜினாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. வீட்டில் மூத்த மகன் கொம்பையா வேலைக்குச் செல்லும் போது, இளைய மகன் கல்லூரிக்குச் செல்லும் நேரங்களை பயன்படுத்தி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். சில சமயங்களில் இருவரும் வெளியே சென்று வந்ததும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று ரெஜினா மற்றும் மாசானமுத்து இருவரும் வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, வேலை முடித்து வீடு திரும்பிய மூத்த மகன் கொம்பையா, இருவரையும் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். தனது கண்முன்னே தாய் தவறான உறவில் இருப்பதாகக் கருதி, ஆத்திரத்தில் சைக்கிள் காற்றடிக்கும் இரும்பு பம்பால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில், ரெஜினா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அப்போது, மாசானமுத்து தப்பிச் சென்று மறைந்துவிட்டார். திடீரென ஏற்பட்ட சத்தத்தால் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது, ரெஜினா ரத்த வெள்ளத்தில் கிடந்தார். பின்னர், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மூலைக்கரைப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ரெஜினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான கொம்பையாவை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.