தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்றுடன் பணி ஒய்வு பெற்றார். இதையடுத்து பணி மூப்பு அடிப்படையில் தற்போது டிஜிபிக்களாக உள்ள சீமா அகர்வால், ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் ஆகிய 3 பேரில் ஒருவர் டிஜிபியாக வரலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் திடீர் திருப்பமாக பொறுப்பு டிஜிபியாக நிர்வாக பிரிவில் இருந்த வெங்கடராமனை தமிழக அரசு நியமிக்க முடிவு செய்தது. சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் இன்று ஒய்வு பெற்ற நிலையில் மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் டிஜிபி பொறுப்புகளை வெங்கடராமனிடம் வழங்கினார். அதை தொடர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு புதிய டிஜிபியாக அவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பதவியேற்றதும் அவர் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால பணித் திட்டங்கள் குறித்து நடைபெற்ற இந்த ஆலோசனையில், பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிகழ்வில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள மூத்த அதிகாரிகளாக சீமான் அகர்வால், சந்தீப் ராய் ரத்தோர், அபய் குமார் சிங், வன்னிய பெருமாள் உள்ளிட்ட டிஜிபிக்கள் யாரும் பங்கேற்காதது பேசு பொருளாகியுள்ளது. ஓய்வு பெற்ற சங்கர் ஜிவால் வழியனுப்பு நிகழ்விலும் டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் 8 பேரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: தவெக – அமமுக கூட்டணி..? நாசுக்கா பதில் சொன்ன டிடிவி தினகரன்.. தேர்தலில் வரப்போகும் ட்விஸ்ட்..!!