நமது வாழ்க்கை முறையில் டீ மற்றும் காபி என்பது வெறும் பானங்கள் மட்டுமல்ல. அவை ஒரு உணர்வின் வெளிப்பாடாக உள்ளது. காலையில் எழுந்தவுடனும் அல்லது மாலையிலும் ஒரு கப் டீ அல்லது காபி இல்லாமல் அந்த நாளே முடிவடையாது. ஆனால், இப்போது இந்த பழக்கத்திற்கு விலை உயர்வு ஒரு தடையாக வந்துள்ளது.
சென்னையில் டீ கடைகளின் வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, டீ மற்றும் காபி விலை 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. புதிய விலை இன்று முதல் நடைமுறைக்கு வந்தது. அதன்படி, ஒரு கிளாஸ் டீ ரூ.12ல் இருந்து ரூ.15 ஆகவும், காபி ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வுக்கு பல காரணங்கள் கூறப்பட்டுள்ளன. பால் மற்றும் டீ/காபி தூளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும், போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்ததும் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, பெரும்பாலான மக்களுக்கு, குறிப்பாக தினசரி உழைப்பாளர்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு பெரும் சுமையாகவே மாற்றியுள்ளது. “ஒரு நாள் சாப்பாட்டுக்குத் தான் பணம் போதவில்லையே, இப்போ ஒரு டீ குடிக்கவும் யோசிக்கணும்” என்றே சிலர் குமுறுகின்றனர். ரயில் நிலையங்கள், பஸ் ஸ்டாண்டுகள் போன்ற பொது இடங்களில் இந்த விலை உயர்வு பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, ஏற்கனவே அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவுகளுக்கு இந்த டீ-காபி விலை உயர்வும் மேலும் ஒரு சிக்கலாகவே பார்க்கப்படுகிறது.
Read More : இனி வாய் துர்நாற்றம் பற்றி கவலைப்பட வேண்டாம்..!! பாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்..!!