இல்லத்தரசிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் சீரியல்கள், தனி ரசிகர் பட்டியல்களை உருவாக்குகின்றன. இந்த மனநிலையைப் புரிந்து கொண்ட தொலைக்காட்சிகள், காலையில் இருந்து இரவு வரை விதவிதமான கதைக்களங்களுடன் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன.
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்த நிலையில் இரண்டாவது பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரு குடும்பத்தையும் இணைப்பதை கதைக்களமாக கொண்ட இந்த சீரியலில் கார்த்திக் ராஜா லீட் ரோலிலும் ரேவதி ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த சீரியலில் நடித்துள்ள பெண் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அவர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா..? பிரபல நடிகைகள் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகைகள், அவர்களின் கதாபாத்திர முக்கியத்துவம் மற்றும் சீரியலின் பிரபலத்துடன் நேர்மாறாக மாறுபடுகின்றன.
கார்த்திகை தீபம் சீரியலில், ரேவதி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் வைஷ்ணவி சதீஷ்க்கு ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படுகிறது. அதே போல அந்த சீரியலில் சாமுண்டீஸ்வரியாக நடிக்கும் ரேஷ்மா பசுபுலெட்டிக்கு 20 ஆயிரம் ரூபாயும், ஸ்வாதிக்கு 8 ஆயிரமும், மாயாவிற்கு 8 ஆயிரம், ரோகினிக்கு 10 ஆயிரம், துர்காவின் சம்பளம் 10 ஆயிரம், மைதிலியின் சம்பளம் 15 ஆயிரம், அபிராமியின் நாச்சியார் 15 ஆயிரம், சந்திரகலாவிற்கு 16 ஆயிரம் ரூபாயும் ஒரு நாள் சம்பளமாக வழங்கப்படுகிறது.
Read more: இந்த உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்கள் மாதுளை பழம் சாப்பிடவே கூடாது..!! உஷாரா இருங்க..