தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரூர்நகர் பகுதியில் வசித்து வந்த டிரைவர் சேகருக்கு மனைவி சிட்டி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சேகருக்கும், சிட்டிகும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது.
தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த சேகருக்கு திடீரென தலையில் இடி இறங்கியது போல், ஒரு செய்தி வந்துள்ளது. மனைவி சிட்டிக்கு ஹரீஷ் என்ற நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் கணவர் சேகருக்கு தெரியவந்த நிலையில், அவர் தனது மனைவியை கடுமையாக கண்டித்துள்ளார். இதற்கிடையே, கள்ளக்காதலன் ஹரீஷையும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆத்திரமடைந்த மனைவி சிட்டி, தனது கள்ளக்காதலன் ஹரீஷுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, சம்பவத்தன்று கணவர் சேகருக்கு உணவில் தூக்க மாத்திரையை சிட்டி கலந்து கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டதும் மயக்கமான கணவனை கழுத்தை நெறித்தும், இரும்புக் கம்பியால் தலையில் அடித்தும் கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தை மாரடைப்பாக மாற்ற முயற்சித்த சிட்டி, காவல்துறை விசாரணையில் பல முரண்களும், சந்தேகங்களும் எழுந்தன.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில், கொலை குற்றத்தை சிட்டி ஒப்புக்கொண்டார். தற்போது அவர் கைது செய்யப்பட்ட நிலையில், காதலன் ஹரீஷ் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க போலீசார், தனிப்படை அமைத்துள்ளனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பிரபல சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு..!! காரணம் என்ன..? சினிமா வட்டாரத்தில் பரபரப்பு..!!