2000களின் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா.. அஜித், விஜய், சூர்யா, விக்ரம், அஜித், விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.. மேலும் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..
இந்த நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து ஜோதிகா கூறிய கருத்துக்கு இணையத்தில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. கடந்த ஆண்டு, சைத்தான் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தென்னிந்திய படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாதது குறித்துப் பேசினார்.. மேலும் திரைப்பட போஸ்டர்களில் பெண் நடிகர்களுக்கு பெரும்பாலும் சமமான இடம் வழங்கப்படுவதில்லை என்றும் ஜோதிகா கூறியிருந்தார்..
ஆனால் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்ததற்காக அஜய் தேவ்கன் மற்றும் மம்மூட்டியைப் பாராட்டினார். கடந்த ஆண்டு, சைத்தான் நிகழ்ச்சியில் பேசிய ஜோதிகா, “நான் தென்னிந்தியாவில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளேன். ஆனால் பெண்களுக்கு அங்கு அதிக முக்கியத்துவம் கிடைப்பதில்லை, போஸ்டர்களில் கூட இல்லை. மம்மூட்டி மற்றும் அஜய் தேவ்கன் போன்றவர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்” என்று கூறினார்.
கடந்த ஆண்டு வெளியான இந்த வீடியோ மீண்டும் சமூக ஊடகங்களில் மீண்டும் வெளிவந்துள்ளது. ஜோதிகாவின் இந்த கருத்து, தென்னிந்திய திரைப்படத் துறையை நியாயமற்ற முறையில் பொதுமைப்படுத்துவதாக இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்… பல நெட்டிசன்கள் ஜோதிகாவை முக்கியமாகக் கொண்ட தமிழ் திரைப்பட போஸ்டரையும் பகிர்ந்து கொண்டனர்.
ஒரு பயனர் தனது எக்ஸ் பக்கத்தில், ஜோதிகா நடித்த தமிழ் திரைப்பட போஸ்டர்களை பகிர்ந்து, தென்னிந்திய திரைப்படத் துறையைப் பற்றி எதிர்மறையாகப் பேசியதற்காக நடிகையை கடுமையாக விமர்சித்தார்.
அவரின் பதிவில் “கோலிவுட்டில் நடித்தார், சம்பளம் வாங்கினார், சூர்யாவை மணந்தார், தென்னிந்தியாவில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தார், மக்கள் இந்த ஜோடியை மதிக்கிறார்கள். பாலிவுட்டிற்கு சென்று சக ஊழியர்களைப் பாராட்டுவதில் தவறில்லை, ஆனால் தென்னிந்திய சினிமா பற்றி ஒப்பிட்டுப் பேசாதீர்கள்..நீங்கள் ஒரு பச்சோந்தி, கீழ்த்தரமான வாழ்க்கை, ஜோதிகா” என்று குறிப்பிட்டுள்ளார்..
மற்றொரு பயனர் தனது பதிவில் “ ஜோதிகா – கவனத்தைத் தேடுவதில் வல்லவர் – பொய்யர் மற்றும் அருவருப்பான சந்தர்ப்பவாதி.. அவர் வெறும் கவர்ச்சியான பெண்ணாக/சிறிய வேடத்தில் வரும் படங்களில் கூட, அவர் போஸ்டர்களில் இடம்பிடித்தார்.. இந்தப் பெண் பாலிவுட்டில் அதிக கவனத்தை விரும்புகிறார், மேடையில் ஏறும்போதெல்லாம், தென்னிந்திய சினிமா மற்றும் தென்னிந்திய ரசிகர்களைப் பற்றி அவதூறாகப் பேசுகிறார்.” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்..
ஜோதிகா கடைசியாக தமிழில் 2021 ஆம் ஆண்டு வெளியான உடன்பிறப்பே திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு, 2023 ஆம் ஆண்டு வெளியான காதல்—தி கோர் என்ற மலையாளப் படத்தில் நடித்தார். அவர் சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஷைத்தான் படத்திலும், டப்பா கார்டெல் வெப் சீரிஸிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.