தென்னிந்தியாவின் முன்னணி உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.. தமிழ்நாடு மட்டுமின்றி, ஆந்திரா கேரளாவிலும் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் தான் தனது கடைசி படம் என்று அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. பாக்ஸ் ஆபிஸில் வசூலில் முன்னணியில் இருக்கும் நடிகராகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் விஜய் வலம் வருகிறார். திரையில் வெற்றிகரமான நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அரசியல் தலைவராக மாறி உள்ளார்.. அவரின் அரசியல் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கிறதா என்பது போக போக தான் தெரியும்..
நடிகர் விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைகள் நிறைந்ததாகவே உள்ளது.. நடிகர் விஜய் சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் நடிகர் விஜய்யும் – சங்கீதாவும் பிரிந்துவிட்டதாக கடந்த சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.. காரணம் விஜய்யின் பட நிகழ்ச்சிகள் அல்லது கட்சி அறிவிப்பு அல்லது மாநாடு என எந்த நிகழ்ச்சிகளிலும் விஜய்யின் மனைவி கலந்து கொள்வதில்லை.. எனவே விஜய்யும் சங்கீதாவும் பிரிந்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.. மேலும் விஜய்யும் த்ரிஷவும் லிவ்-இன் உறவில் இருப்பதாகவும் ஒரு வதந்தி உள்ளது.. எனினும் இது எந்தளவு உண்மை என்பது தெரியவில்லை.. இந்த நிலையில் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது..
சங்கீதா சொர்ணலிங்கம் யார்?
சங்கீதா சொர்ணலிங்கம் நடிகர் தளபதி விஜயின் மனைவி. அவர் ஒரு இலங்கைத் தமிழர். சங்கீதாவும் விஜய்யும் ஆகஸ்ட் 25, 1999 அன்று திருமணம் செய்து கொண்டனர், அவர்களுக்கு ஜேசன் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர். இங்கிலாந்தில் குடியேறிய ஒரு பிரபல தமிழ் தொழிலதிபரின் மகள் சங்கீதா. அவரது தந்தை இலங்கையைச் சேர்ந்தவர். சங்கீதாவின் சொத்து மதிப்பு 400 கோடி ரூபாய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன..
தளபதி விஜய் மற்றும் சங்கீதாவின் காதல் கதை
விஜய்யின் மிகப்பெரிய ரசிகை தான் சங்கீதா.. விஜய்யின் சூப்பர்ஹிட் படமான பூவே உனக்காக இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது, இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் பிரபலமடைந்தது. இந்த படத்தை படத்தைப் பார்த்த பிறகு, விஜய்யைச் சந்திக்க சங்கீதா சென்னைக்கு வந்தார். அப்போது விஜய் படப்பிடிப்பில் இருந்த போது, அவரை பார்க்க வெளிநாட்டு தமிழ்ப் பெண் வந்திருப்பதாக அவருக்கு சொல்லப்பட்டது..
படப்பிடிப்பு தளத்தில், விஜய்யும் சங்கீதாவும் சில மணிநேரம் உரையாடினர்.. அப்போது சங்கீதாவை தனது வீட்டிற்கு வரும் படி அழைத்துள்ளார்.. சங்கீதா வீட்டிற்கு விஜய் சென்ற போது தனது தாய் தந்தைக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தார்..
முதல் சந்திப்பிலேயே சங்கீதாவின் நடவடிக்கைகள் பிடித்துப் போகவே அவரை தனது வீட்டில் அறிமுகம் செய்துள்ளார் விஜய். விஜய்யின் பெற்றோருக்கும் சங்கீதாவை பிடித்துவிட்டது.. எனவே முதலில் திருமண பேச்சை எடுத்தது விஜய்யின் பெற்றோர் தான் என்று கூறப்படுகிறது.. அதற்கு விஜய்யும் சங்கீதாவும் ஒப்புதல் தெரிவிக்கவே, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி மற்றும் தாய் ஷோபா ஆகியோர் லண்டன் சென்று சங்கீதாவின் பெற்றோரிடம் திருமணத்தை பேசி முடித்துள்ளனர்…
சங்கீதா ஒரு இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர், அதே நேரத்தில் தளபதி விஜய் ஒரு கிறிஸ்தவர். அவர்களின் மதப் பின்னணி வேறுபட்டிருந்தாலும், அவர்களின் திருமணம் இந்து பழக்கவழக்கங்களின்படி நடைபெற்றது.