காதலி தன்னுடைய செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என்பதற்காக காதலியின் மொத்த ஊருக்கும் செல்லும் மின்சார இணைப்பை, காதலன் துண்டித்துள்ள சம்பவம் அறங்கேறியுள்ளது.
காதல் சில நேரங்களில் நாடகம், ஆச்சரியம், சண்டை எல்லாவற்றையும் கலந்த ஒரு பாலிவுட் படக் காட்சியைப் போலத் தெரிகிறது. இதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைதலங்களில் பரவி வரும் ஒரு வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாகியுள்ளது.
வீடியோவில், கையில் பெரிய இடுக்கி பிடித்துக் கொண்டு மின் கம்பத்தில் ஏறிய ஒருவன், மின் கம்பிகளை வெட்டி மின்சாரத்தை துண்டிப்பது பதிவாகியுள்ளது. காரணம்? அவரது காதலியின் தொலைபேசி தொடர்ந்து பிஸியாக இருந்தது. இதனால் கோபம் அடைந்த அந்த நபர், தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த முழு கிராமத்தின் மின்சாரத்தையும் துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் உண்மை இன்னும் உறுதியாக தெரியவில்லை. இருந்தாலும், இணையத்தில் இந்தக் காட்சி வைரலாகி, மீம்களும், கிண்டலான கருத்துக்களும் குவிந்து வருகின்றன. ஒரு பயனர் “பல காதலர்களைக் கண்டேன்… ஆனால் இப்படி கிராமத்தையே இருளில் ஆழ்த்தும் காதலை கண்டது இதுவே முதல் முறை!” என்று குறிப்பிட்டார்.
மற்றொரு பயனர், “காதல் தோல்வி அடைந்தாள் கை நரம்பை வெட்டுவார்கள்… ஆனால் இவன் கிராமத்தின் மின்சார ஒயரை வெட்டிவிட்டான்” என கிண்டல் செய்தார். மூன்றாவது பயனர் “அந்த பெண்ணால் தான் கிராமமே இருளில் மூழ்கியது” என சாடினார். சிலர் இதை சாய்ரா திரைப்படக் காட்சிகளுடன் ஒப்பிட்டு, அவரை நகைச்சுவையாக “உண்மையான சாய்ரா” என்று அழைத்தனர்.
இது போன்ற விசித்திரச் சம்பவம் இதற்கு முன்பும் நடந்திருக்கிறது. 2022-ல் பீகாரின் பூர்னியா மாவட்டத்தில், கணேஷ்பூர் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது காதலியை ரகசியமாக சந்திக்க தினமும் மாலை மின்சாரத்தை துண்டித்தார். அருகிலுள்ள பகுதிகளில் மின்சாரம் இயல்பாக இருந்தபோதும், அந்த கிராமத்தில் மட்டும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் தொடர்ந்து இருள் நிலவியது. பின்னர் உண்மையை அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
Read more: ஊழியருடன் உறவு.. அடுத்தடுத்து வெடிக்கும் சர்ச்சை.. மேலும் ஒரு CEO பணி நீக்கம்! நெஸ்லே அதிரடி!



