தேசிய அளவில் கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன.
பணியின் விவரம்: தேசிய அளவில் உள்ள 28 மாநிலங்களின் Regional Rural Banks (RRBs)-இல் கீழ்க்கண்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
குரூப் – B: அலுவலக உதவியாளர் (Multipurpose) – 7,972 பணியிடங்கள்
குரூப் – A:
- அதிகாரி (Scale – I) – 3,907 பணியிடங்கள்
- அதிகாரி (Scale – II) – 1,139 பணியிடங்கள்
- அதிகாரி (Scale – III) – 199 பணியிடங்கள்
வயது வரம்பு
- அலுவலக உதவியாளர் பதவிக்கு 18 முதல் 28 வரை இருக்க வேண்டும்.
- அதிகாரி பதவியில் Scale-I பணியிடங்களுக்கு 18 முதல் 30 வரை இருக்கலாம்.
- அதிகாரி பதவியில் Scale-II பணியிடங்களுக்கு 21 முதல் 32 வயது வரை இருக்கலாம்.
- அதிகாரி பதவியில் Scale-III பதவிக்கு 21 முதல் 40 வயது வரை இருக்கலாம்.
- மத்திய அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உள்ளது.
கல்வித்தகுதி:
அலுவலக உதவியாளர் பதவி: அலுவலக உதவியாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் உள்ள பணியிடங்களுக்கு தமிழ் தெரிந்திருக்க வேண்டும். கணினி திறன் தேவை. அனுபவம் தேவையில்லை.
அதிகாரி Scale-I: ஏதாவது ஒரு பாடத்தில் டிகிரி முடித்திருக்க வேண்டும், தமிழ் மற்றும் கணினி திறன் அவசியம். இருப்பினும், வேளாண் சார்ந்த படிப்புகள், தகவல் தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனுபவம் அவசியமில்லை.
அதிகாரி Scale-II பதவி: ஒரு டிகிரியுடன் 2 ஆண்டுகள் வங்கி அல்லது நிதி சார்ந்த நிறுவன அனுபவம் தேவை. வங்கி, நிதி, வேளாண், கூட்டுறவு, தகவல் தொழில்நுட்பம், மேனேஜ்மெண்ட், சட்டம், பொருளாதாரம் மற்றும் கணக்கியல் பாடப்பிரிவுகள் கொண்டு படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிஏ, சட்டம், எம்பிஏ, மார்க்கெட்டிங், விவசாயம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
துறை சார்ந்த பிரிவுகளில் உள்ள இடங்களுக்கு எலெக்ட்ரிக்கல், கம்யூனிகேஷன், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் அல்லது நிகரான பட்டப்படிப்பில் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 ஆண்டு அனுபவம் தேவை. சிஏ, சட்டம், எம்பிஏ, மார்க்கெட்டிங், விவசாயம் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அதிகாரி Scale-III பதவி: ஏதேனும் ஒரு பட்டபப்டிப்புடன் 5 ஆண்டு அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை:
- அலுவலக உதவியாளர் பதவிக்கு முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது.
- அதிகாரி (Scale-I) பதவிக்கு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.
- திகாரி (Scale-II, III) பதவிக்கு ஒரே கட்ட ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21.09.2025 ஆகும்.



