இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு சூப்பர் வேலை.. ரூ.1.20,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க..!!

job 2

பவர்கிரிட் நிறுவனத்தில் களப் பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பணிகளுக்காக 1543 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.


காலிப்பணியிடங்கள்:

  • கள பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்) -532
  • கள பொறியாளர் (சிவில்)- 198
  • கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல்) -535
  • கள மேற்பார்வையாளர் (சிவில்) -193
  • கள மேற்பார்வையாளர் (எலெக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேஷன்) – 85

கல்வித்தகுதி:

களப் பொறியாளர் (மின்சாரம்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்களுடன் மின் துறையில் முழுநேர BE / B.Tech / B.Sc (Eng.) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

களப் பொறியாளர் (சிவில்): அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / நிறுவனத்தில் சிவில் பிரிவில் முழுநேர பி.இ / பி.டெக் / பி.எஸ்சி (இன்ஜி.) முடித்திருக்க வேண்டியது அவசியம்.

வயது வரம்பு: கள பொறியாளர் மற்றும் கள மேற்பார்வையாளர் பதவிக்கு 29 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பில் ஒபிசி 3 வருடம், எஸ்சி/எஸ்டி 5 வருடம், மாற்றுத்திறனாளிகள் 10 வருடம் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தளர்வுகள் அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: பொது எழுத்துத் தேர்வில் பங்கேற்க வேண்டும். கள பொறியாளர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பின் பின் பணி வழங்கப்படும்.கள மேற்பார்வையாளர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் நடத்தப்பட்டு பணி வழங்கப்படும்.

சம்பளம்: பவர்கிரிட் நிறுவனத்தில் கள பொறியாளர் பதவிக்கு மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை சம்பளம் வழங்கப்படும். கள மேற்பார்வையாளர் பதவிக்கு மாதம் ரூ.23,000 முதல் ரூ.1,05,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது? இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.powergrid.in/en/job-opportunities என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.400 செலுத்த வேண்டும். கள மேற்பார்வையாளர் பணிக்கு ரூ.300 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ முன்னாள் ராணுவத்தினருக்கு தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: செப்டம்பர் 17-ம் தேதி கடைசி தேதியாகும்.

Read more: உலகின் மிக நீளமான கார் இதுதான்! மினி கோல்ஃப் மைதானம், ஹெலிபேட், நீச்சல் குளம் இருக்கு.. இதை உருவாக்கியவர்…?

English Summary

Super job for engineering graduates.. Salary up to Rs.1,20,000.. Apply immediately..!!

Next Post

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு வந்தாச்சு.. சம்பளம் உயரப்போகுது! எவ்வளவு தெரியுமா?

Tue Sep 2 , 2025
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (டிஏ) உயர்வு குறித்த ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.. சமீபத்திய தகவல்களின்படி, அகவிலைப்படியில் 3% அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதனால் தற்போதைய அகவிலைப்படி 55% இலிருந்து 58% ஆக அதிகரிக்கும். இந்த மாற்றம் AICPI (அகில இந்திய நுகர்வோர் விலை குறியீடு) அடிப்படையில் கணக்கிடப்படும். விதிகளின்படி, இந்த அதிகரிப்பு ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும். ஒவ்வொரு ஆண்டும், […]
w 1280imgid 01jx2chds8z4y0cnv8mahkgw4gimgname 8th pay commission arrears 1749205694248

You May Like