பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் சில நாட்களுக்கு முன்பு ராமதாஸ் தனது 2வது மனைவி உடன் சுசீலாவுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வெளியானது..
ராமதாஸ் உடன் பல ஆண்டுகளாகவே இணைத்து பேசப்பட்டவர் தான் சுசீலா. இவர் செவிலியர் என்று கூறப்படுகிறது.. இவர் பல ஆண்டுகளாக ராமதாஸை கவனித்துக் கொள்ளும் நர்சாக இருந்தார்.. அதாவது அன்புமணி குழந்தையாக இருக்கும் போதே இவர் ராமதாஸ் வீட்டில் நர்சாக வேலை பார்த்து வந்தாராம்.. ஒரு கட்டத்தில் சுசீலாவை ராமதாஸ் 2வது திருமணம் செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது..
ஆனால் சுசீலா உடனான உறவை ராமதாஸ் இதுவரை வெளிப்படையாக காட்டிக் கொண்டது இல்லை.. இதனால் சுசீலா விவகாரமும் ரகசியமாகவே வைக்கப்பட்டது.. இந்த சூழலில் கடந்த 24-ம் தேதி, திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான ஸ்டார் ஹோட்டலில் ராமதாஸ் – சுசீலா தம்பதியின் திருமண விழா நடைபெற்றது.. இந்த நிகழ்ச்சியின் போட்டோக்கள் இணையத்தில் வெளியானது..
ஏற்கனவே அன்புமணி பிரச்சனையால் பாமகவில் உச்சக்கட்ட மோதல் நிலவி வரும் நிலையில், தற்போது சுசீலா விவகாரமும் புதிய புயலை கிளப்பி உள்ளது.. பாமகவில் வெடித்துள்ள அப்பா -மகன் மோதலுக்கு காரணமே இந்த சுசீலா தான் என்றும் கூறப்படுகிறது..
ஆனால் இந்த போட்டோவை வெளியிட்டதே அன்புமணி தரப்பு தான் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. ராமதாஸின் பெயரை கெடுப்பதற்காகவே சுசீலா உடனான திருமண நாள் போட்டோக்கள் வேண்டுமென்ற கசியவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன..
இந்த நிலையில் ராமதாஸுக்கு 3வது மனைவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்ற கட்சியின் தலைவர் சி.என். ராமமூர்த்தி பிரபல யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.. அப்போது பேசிய அவர் “ ராமதாஸ், 1965-ம் ஆண்டு சரஸ்வதியை திருமணம் செய்து கொண்டார்.. சரஸ்வதி 5-ம் வகுப்பு வரை படித்திருந்தார்.. ராமதாஸ் அவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் ராமதாஸ் சுசீலாவை திருமணம் செய்து கொள்ளாமலே அவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.. ஒருகட்டத்தில் சுசீலாவின் தாயார் வேறொருவருக்கு அவரை திருமணம் செய்து வைத்து விட்டார்.. சுசீலா திருமணமான உடன் திருவண்ணாமலைக்கு சென்று விட்டார்.. திருமணமான அன்றைய தினம் இரவே ராமதாஸ் ஆள் வைத்து சுசீலாவுக்கு தாலி கூட்டி வந்துவிட்டார்.. இது கள்ளக்காதல்..
இவர்கள் இருவரும் தவிர, ராமதாஸிற்கு 3வது மனைவியும் இருக்கிறார்.. அந்த பெண், அறந்தாங்கியை சேர்ந்தவர்.. இவருக்கும் ஒரு மகன், 2 மகள் உள்ளனர்.. அவரின் மகனை பார்த்தால் அன்புமணியை போலவே இருப்பார்.. அவருக்கும் ராமதாஸுக்கும் பிறந்த மகன் தான் அவர்.. ராமதாஸின் 3 மனைவிகளும் வெவ்வேறு சமுதாய சேர்ந்தவர்கள்.. ராமதாஸின் 3வது மனைவி தான் தென் தமிழ்நாட்டின் நிர்வாகிகள் நீக்குவது சேர்ப்பது எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கிறார்.. மற்றவர்கள் காதலித்தால் நாடகக் காதல் என்று ராமதாஸ் கூறுகிறார்..
ஆனால் அவர் செய்தால் தவறு இல்லையா..? ராமதாஸுக்கு 3வது மனைவி இருப்பதற்கு ஆதாரம் என்னிடம் உள்ளது.. 3வது மனைவிக்கு பிறந்த குழந்தைகளையும் படிக்க வைத்தார்.. அவரின் மகனுக்கு அறந்தாங்கியில் மருத்துவமனை கட்டிக் கொடுத்துள்ளார்.. சுசீலா தான் வட தமிழ்நாட்டிற்கு கண்ட்ரோல்.. அவரின் 3வது மனைவி தென் தமிழ்நாட்டிற்கு கண்ட்ரோல்.. இது பாமகவின் பழைய நிர்வாகிகள் அனைவருக்கும் தெரியும்..” என்று தெரிவித்தார்..
Read More : அதிமுகவில் மீண்டும் சசிகலா, ஓபிஎஸ், தினகரன்? செங்கோட்டையனின் அதிரடி மூவ்.. நெருக்கடியில் இபிஎஸ்!