தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தற்போதே தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நிலையில், ஏற்கனவே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும், அதிமுக ஆட்சிக்கு வந்தால், என்னென்ன திட்டங்களை கொண்டு வருவோம் என்பது குறித்தும் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், மேலூர் பேருந்து நிலையத்தில் பிரச்சார வாகனத்தில் நின்றபடி மக்கள் மத்தியில் பேசிய அவர், திமுக அரசு விவசாயத்துக்கு எதிராக செயல்படுவதாகவும், டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டங்களை முன்னிலைப்படுத்தியதை விவசாயத்துக்கு எதிரான நடவடிக்கையாக பார்ப்பதாக அவர் குற்றம்சாட்டினார். கடந்த ஆட்சியில் அதிமுக அரசு டெல்டா பகுதிக்கு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அந்தஸ்து பெற்றுத்தந்தது என்பதையும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
அதிமுக ஆட்சியில் ஆரம்ப வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களில் ரூ.12,100 கோடி வரை இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 2026இல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 4,000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
ஒரு நல்ல அரசு என்றால், அது ஏழை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டியது அவசியம். ஆனால், திமுக ஆட்சி அதிமுக தொடங்கிய பல நலத்திட்டங்களை ரத்து செய்வதே முக்கிய சாதனையாக இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.
Read More : உண்மையிலேயே கடவுள் வந்து நம்மை காப்பாற்றுவாரா..? எந்த ரூபத்தில் வருவார் தெரியுமா..?



