கேரள மாநிலத்தின் ஆலப்புழா மாவட்டம் பள்ளிப்புரம் பகுதியைச் சேர்ந்த 27 வயது சனுஷா என்ற இளம்பெண் மற்றும் 11ஆம் வகுப்பு படிக்கும் 17 வயது பள்ளி மாணவன் திடீரென காணாமல் போனதால், இருவரின் குடும்பத்தாரும் தனித்தனியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சில மாதங்களுக்கு முன்பு குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பின்னர், செல்போன் நம்பரை பகிர்ந்து கொண்ட இருவரும், அடிக்கடி பேசி நெருக்கமாகியுள்ளனர். இவர்கள், இருவருமே காணாமல் போன நிலையில், அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவானது. இதனால், போலீசார் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிய சிக்கல்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், சனுஷா தனது உறவினருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஒரு செய்தியை அனுப்பியுள்ளார். அதன் அடிப்படையில் மேற்கொண்ட தீவிர விசாரணையில், இருவரும் கர்நாடக மாநிலத்தின் கொல்லூர் பகுதியில் உள்ள லாட்ஜில் தங்கியிருப்பது உறுதியானது. இதையடுத்து, உடனே அங்கு விரைந்த போலீசார், இருவரையும் மீட்டு சேர்த்தலா பகுதிக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, சனுஷா சேர்த்தலா முதல் வகுப்பு குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர், கொட்டாரக்கரை மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார். 11ஆம் வகுப்பு மாணவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். 27 வயது இளம்பெண்ணுடன் 17 வயது மாணவன் ஊரைவிட்டு ஓடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.