ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமஜ்ஹிரா என்ற கிராமத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதர்ஷ் சிங் (31), என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு லில்லி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 9 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பத்தில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி ஒரு எதிர்பாராத சம்பவம் அரங்கேறியது. சமீபகாலமாக லில்லி, தனது கணவருடன் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதை தவிர்த்து வந்துள்ளார். உடல்நலக்குறைவு என காரணம் கூறி வந்த நிலையில், ஆதர்ஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அப்போது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பக்கத்து வீட்டுக்கு குடியேறிய பெல்சியா என்ற பெண்ணுடன் லில்லி நெருங்கி பழகி வந்துள்ளார். இதுகுறித்து அறியாத ஆதர்ஷ், ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைக்குச் சென்றுவிட்டு திடீரென வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது லில்லி வீட்டில் இல்லாததால் குழப்பமடைந்த அவர், பக்கத்து வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளார்.
பக்கத்து வீட்டில் இருந்து வந்த சத்தம் கேட்டு உள்ளே சென்ற ஆதர்ஷ், தனது மனைவி லில்லி, பெல்சியாவுடன் ஓரினச்சேர்க்கை உறவில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதனால், மனம் உடைந்த அவர், உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். காவல்துறையினர் வருவதற்குள், பெல்சியா அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
காவல்துறையினரிடம் ஆதர்ஷ் அளித்த புகாரில், தனது ஒன்பது வருட திருமண வாழ்க்கை நாசமாகிவிட்டதாகவும், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் வேதனையுடன் தெரிவித்தார். இதையடுத்து, இச்சம்பவம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.