நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த இளைஞரின் அண்ணன், இதுகுறித்து வேலூர் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
வேலூர் கஸ்பா பயர் லைன், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 50 வயதுடைய என்.சீனிவாசன் என்பவர் குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவில், தனது தம்பி மதன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு ஒரு யூடியூப் சேனல் உரிமையாளரால் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எனது தம்பி மதன், ஆகஸ்ட் 27ஆஆம் தேதி உடல் சிதைந்த நிலையில் சடலமாக கொண்டுவரப்பட்டு எங்களிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரது மர்ம மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. எனவே, எனது தம்பியை கட்டாயப்படுத்தி மாநாட்டுக்கு வேனில் அழைத்துச் சென்று சடலமாக கொண்டு வந்தது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து, இந்த மனுவை பெற்றுக்கொண்ட எஸ்.பி. மயில்வாகனன், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு தெற்கு காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு சென்ற தம்பி மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், தற்போது அண்ணன் புகார் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : குலதெய்வத்தின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா..? குலதெய்வம் தெரியாதவர்கள் என்ன செய்யலாம்..?



