500 ஏக்கர் சொத்து.. பரம்பரை பங்களா.. மொத்தமும் போச்சு.. காமெடி நடிகர் சத்யனின் வலி நிறைந்த சோகக் கதை!

actor sathyan

தமிழ் சினிமாவில் எத்தனையோ நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர்.. ஆனால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிப்பது சிலர் தான்.. அப்படிப்பட்ட ஒருவர் தான் நடிகர் சத்யன்.. விஜய்யின் நண்பன் படத்தில் “சைலன்சர்” என்ற கேரக்டரில் நடித்திருந்த ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.. ஆனால் நடிகர் சத்யன் நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமாகவில்லை என்பது பலருக்கும் தெரியாது.. அவர் முதலில் ஒரு ஹீரோவாக தான் அறிமுகமானர்.. 2000 ஆம் ஆண்டு இளையவன் படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்தை அவரின் தந்தை இளையராஜாவின் கூட்டாளியான மாதம்பட்டி சிவகுமார் தயாரித்திருந்தார்.


பின்னர் சத்யன் கண்ணா உன்னை தேடுகிறேன் படத்தில் கதாநாயகனாக நடித்தார். துரதிர்ஷ்டவசமாக, இரண்டு படங்களும் படுதோல்வி அடைந்ததது.. இதனால் சத்யன் துணை வேடங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவர் நகைச்சுவை நடிகராகவும், பெரும்பாலும் ஹீரோவின் நண்பராக நடிக்கத் தொடங்கினார்.

70க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சத்யன், நண்பன், துப்பாக்கி மற்றும் நவீன சரஸ்வதி சபதம் ஆகிய படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நகைச்சுவை நடிகராக தமிழி திரையுலகில் முத்திரை பதித்தார்…

ஆனால் திரையுலகில் நகைச்சுவை நடிகராக தோன்றும் சத்யனுக்கு வலி நிறைந்த சோகக் கதை உள்ளது.. கோவை மாவட்டம் மாதம்பட்டியை சேர்ந்தவர் தான் சத்யன். அவரது தந்தை, மாதம்பட்டி சிவகுமார், 500 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலத்தையும், 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த ஒரு பங்களாவையும் வைத்திருந்த ஒரு பணக்கார நில உரிமையாளர் ஆவார். ஒரு காலத்தில் சத்யனின் இப்பகுதியில் குடும்பம் ஒரு ஜமீன் குடும்பமாக கருதப்பட்டது, மேலும் சத்யன் “சின்ன ராஜா ” என்று அன்பாக அழைக்கப்பட்டார்.

இருப்பினும், சிவகுமாரின் சினிமா மீதான ஆழ்ந்த ஆர்வம் காரணமாக குடும்பத்தின் சொத்துக்கள் குறையத் தொடங்கியது. பிரபல நடிகர்கள் சத்யராஜ் மற்றும் மார்க்கண்டேயன் சிவகுமார் ஆகியோர் சிவகுமாரின் உறவினர்கள் தான்.. தனது ஆரம்பக்கட்ட திரை வாழ்க்கையில் சத்யராஜ் கஷ்டப்பட்ட போது, சிவகுமார் அவருக்கு உதவி உள்ளார்.. அவருக்கு மாதாந்திர உதவித்தொகையையும் வழங்கினார். பின்னர், சிவகுமார் தயாரிப்பாளராக மாறினார்.. ஆனால் அவர் தயாரித்த படம் தோல்வி அடைந்ததால், அவரது முயற்சிகள் பெரும் நிதி இழப்புகளுக்கு வழிவகுத்தன. கடன்களை ஈடுகட்ட, சத்யனின் தந்தை சிவகுமார் குடும்பம் படிப்படியாக தங்கள் நிலங்களையும் சொத்துக்களையும் விற்றது.

தனது மகன் சத்யனை எப்படியாவது ஒரு ஹீரோவாக்க வேண்டும் என்பதற்காக, சிவகுமார் இளையவன் என்ற படத்தைத் தயாரித்தார். ஆனால் அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது.. இதனால் அவர்களின் சொத்துக்கள் மேலும் குறைந்தது.. குறைத்தது. சிவகுமாரின் மரணத்திற்குப் பிறகு, நிலைமை மோசமடைந்தது, இறுதியில் சத்யன் மாதம்பட்டியில் உள்ள தங்கள் பரம்பரை பங்களாவை விற்க வேண்டியிருந்தது. ஒரு காலத்தில் பணக்காரர்களாக இருந்த அந்த ஜமீன் குடும்பத்திற்கு தற்போது பரம்பரை சொத்துக்கள் என எதுவும் இல்லை என்பதே வேதனையான உண்மை.. சினிமாவால் வீழ்ந்தவர்களும் உண்டு என்பதற்கு சத்யனின் தந்தை மாதம்பட்டி சிவகுமார் மிகச்சிறந்த உதாரணம்..

Read More : நடிகை சமந்தாவுக்கு பிரபல இயக்குனருடன் 2வது திருமணம்? புதிய வீடியோவால் பரபரப்பு..

RUPA

Next Post

பலி எண்ணிக்கை 2,200ஐ தாண்டியது.. ஆப்கானிஸ்தானை புரட்டிப் போட்ட நிலநடுக்கம்.. தொலைதூரப் பகுதிகளை அடைய போராடும் மீட்புப் குழுவினர்!

Thu Sep 4 , 2025
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.. இந்த நிலநடுக்கத்தில் 2,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான் அதிகாரிகள் வியாழக்கிழமை உறுதிப்படுத்தினர். இந்த பேரழிவில் கிட்டத்தட்ட 4,000 பேர் காயமடைந்துள்ளனர், பெரும்பாலான உயிரிழப்புகள் பாகிஸ்தான் எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான குனார் மாகாணத்தில் பதிவாகியுள்ளன. அரசாங்க துணை செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபித்ரத், எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் இறப்பு எண்ணிக்கை […]
afghanistan earthquake 02402415

You May Like