பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் 2வது திருமணம் குறித்த பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, ரங்கராஜுடன் தனக்குத் திருமணம் ஆகிவிட்டதாக போட்ட பதிவு தான் இதற்கு காரணம்.. மேலும் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிசில்டா கூறியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது..
ஆனால், மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கனவே திருமணமானவர்.. அவருக்கு ஸ்ருதி என்ற மனைவியும் 2 மகன்களும் இருக்கிறார்கள்.. ஜோய்கிரிசில்டாவின் இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி, ஸ்ருதி இது குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார்…
மாதம்பட்டி ரங்கராஜும் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை, இப்படி ரங்கராஜும், ஸ்ருதியும் மௌனம் காத்து வந்த நிலையில், ஜோய்கிரிசில்டா மட்டும் புகைப்படங்களையும், மகிழ்ச்சிப் பதிவுகளையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். மேலும் ரங்கராஜுடன் ஜாய் கிரிசில்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வந்தது.. இதனால் மாதம்பட்டி ரங்கராஜின் தனிப்பட்ட வாழ்க்கை சமூக வலைதளங்களில் பேசு பொருளாக இருந்து வருகிறது..
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக ஜாய் கிரிசில்டா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். மேலும் அவர் தனது புகாரில் சென்னையில் கோவிலில் வைத்து தன்னை திருமணம் திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ் தற்போது தன்னுடன் சேர்ந்து வாழ மறுப்பதாகவும் அவர் தெரிவிதிருந்தார்.. 7 மாத கர்ப்பமாக இருக்கும் தன்னை ரங்கராஜ் ஏமாற்றி விட்டதாகவும், தன்னுடன் சேர்ந்து வாழும்படி அவரிடம் மன்றாடி வருவதாகவும் ஜாய் கிரிசில்டா கூறியிருந்தார்.. ரங்கராஜிடம் இதுகுறித்து கேட்ட போது, தன்னை தாக்கியதாகவு, அவருடன் பேச முடியாத வகையில் சிலர் தடுப்பதாகவும் அவர் கூறியிருந்தார்..
சமீபத்தில் ஜாய் கிரிசில்டா, அப்பாவின் அலப்பறைகள் என்று மாதம்பட்டி ரங்கராஜை டேக் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், என்னடி பண்ற பொண்டாட்டி, லவ் யூ, மிஸ் யூ.. நான் ரூம்க்கு வந்து குளிச்சு, சாப்பிட்டு, காபி குடிச்சுட்டேன்.. என கூறி வீடியோவில் முத்தம் கொடுத்துள்ளார்..
இந்த நிலையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ பெண்களை ஏமாற்றும் ஆண்களை கடவுள் நிச்சயம் தண்டிப்பார்.. தர்மம் ஜெயிக்கும்..” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சிம்புவின் வாடி வாடி க்யூட் பொண்டாட்டி என்ற பாடலை பதிவிட்டு, இப்படி எல்லாம் பாட்டு பாடி ஆண்கள் ஏமாற்றுவார்கள் என்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்..
Read More : H.வினோத் பிறந்தநாள்.. ஜனநாயகன் புதிய வீடியோ வெளியானது.. விஜய் ரசிகர்களுக்கு சர்பிரைஸ்!