fbpx

உஷார்..!! டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுவன் பலி..!! சென்னையில் அதிர்ச்சி..!!

டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூவிருந்தவல்லி அருகே சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த சிறுவன் சரவணன் (வயது 10) கடந்த 8ஆம் தேதி முதல் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளான். சிறுவன் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில், முதலில் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது, சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைய துவக்கியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிறுவன் சரவணன் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். சிறுவனுக்கு ரத்த அணுக்கள் குறைதல், ரத்தம் உறைதல் போன்ற டெங்கு அறிகுறிகள் இருந்ததால் அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

தன் பாலின திருமணத்திற்கு அங்கீகாரம்..? உச்சநீதிமன்றம் வழங்கிய 4 விதமான தீர்ப்புகள்..!! விவரங்கள் உள்ளே..!!

Tue Oct 17 , 2023
தன் பாலின திருணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனு மீது 4 விதமான தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள நான்கு நீதிபதிகள் நான்கு விதமான தீர்ப்புகளை வழங்கியதாகவும், இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தலையிட முடியாது என்று மத்திய அரசு நீதிமன்றத்தில் கூறியிருந்ததாகவும், நீதிமன்றம் சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால், சட்டத்தின் சரத்துகளைக் கையாள […]

You May Like