மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கோவண்டி பகுதியில் நடந்த கொடூரமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இட்கா சாலை குடிசை மற்றும் இறைச்சிக் கூடம் அருகே ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கொலை செய்யப்பட்ட பெண் பர்வீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது கணவர் தாஹா, பர்வீனின் உடலை 17 துண்டுகளாக வெட்டி நகரின் பல்வேறு பகுதிகளில் வீசியதாக ஒப்புக்கொண்டுள்ளார். குடும்பத் தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இந்த கொடூரமான சம்பவம் குறித்து பர்வீனின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இரண்டு நாட்களாக தன் மகளின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மருமகனை தொடர்புகொள்ள முடியவில்லை எனவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
சந்தேகத்தின் பேரில் தாஹாவிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல்களை வழங்கியுள்ளார். இருப்பினும், மீட்கப்பட்ட தலையின் புகைப்படத்தை பர்வீனின் தாயாரிடம் காட்டியபோது, அது தனது மகளுடையது என்பதை அவர் உறுதி செய்தார். பிறகு நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், தாஹா தனது மனைவியைக் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : பெண்களே உஷார்..!! சுற்றிவளைக்கும் நிர்வாண கும்பல்..!! பீதியில் உறைந்துபோன கிராமம்..!!