தாறுமாறாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..

gold jewlery

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் தாறுமாறாக உயர்ந்தது..

கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி நேற்று ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.78,000-ஐ தாண்டியது.. மேலும் கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.79,000ஐ தாண்டியது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது.. அதன்படி, இன்று சென்னையில் ஒரு கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,790-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை விற்பனை செய்யப்படுகிறது… தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது.

அதே போல் இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ரூ.137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More : உங்களுக்கு வரும் SMS உண்மையானதா?. போலியானதா?. எவ்வாறு கண்டறிவது?. TRAI-ன் புதிய வழிகாட்டுதல்கள் இதோ!.

RUPA

Next Post

40 வயதுக்கு பிறகும் ஆரோக்கியமாக இருக்க.. இந்த 5 பழக்கங்களை உடனே நிறுத்த வேண்டும்..

Mon Sep 8 , 2025
40 வயது என்பது ஒரு மைல்கல், இந்த வயதில் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியம். இந்த வயதிற்குப் பிறகு, உடல் மாற்றங்களுக்கு உட்படுகிறது, வளர்சிதை மாற்றம் குறைகிறது, ஹார்மோன்கள் மாறுகிறது, மேலும் வாழ்க்கை முறை நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதன் மூலம், நீங்கள் நீண்டகால ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். இருப்பினும், சில பழக்கங்களை கைவிடுவதும் சமமாக முக்கியம். 40 வயதுக்கு பிறகு ஆரோக்கியத்திற்காக கைவிட […]
skipping breakfast 1

You May Like