தமிழில் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமாக விளங்கி வரும் சன் டிவி (SUN TV) 32 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கலாநிதி மாறனின் தலைமையில், 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சன் டிவி திரைப்படங்கள், சீரியல்கள், நிகழ்ச்சிகள் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களின் மனதைக் கவர்ந்து, தொலைக்காட்சித் துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
சன் குழுமத்தின் கீழ், கே டிவி, சுட்டி டிவி, சன் லைஃப், சன் மியூசிக், ஆதித்யா டிவி மற்றும் சன் நியூஸ் போன்ற பல்வேறு தொலைக்காட்சிகள் இணைந்து செயல்படுகின்றன. மேலும், சமீபகாலமாக பிரபலமடைந்து வரும் சன் NXT என்ற ஓடிடி தளமும் இவர்களுக்கு சொந்தமாக உள்ளது.
இந்நிலையில், சன் டிவியின் ஒரு வருட வருமானம் குறித்த தகவல் வெளியாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபல வர்த்தக வட்டாரங்களில் வெளியான தகவலின்படி, சன் டிவிக்கு ஒரு வருடத்திற்கு சுமார் ரூ.3,800 கோடி வருமானம் வருவதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இருப்பினும், சன் குழுமத்தின் சந்தை மதிப்பு மற்றும் அதன் வளர்ச்சி, இந்த தகவல் உண்மையாக இருக்கக்கூடும் என்பதை உணர்த்துகிறது. தொலைக்காட்சித் துறையில் சன் டிவியின் ஆதிக்கம், அதன் வருமானத்தின் மூலம் மேலும் ஒருமுறை நிரூபித்துள்ளது.