தெலங்கானாவில் உள்ள ஸ்ரீனிவாஸ் நகரில் நவீன் மற்றும் யோசிதா என்ற தம்பதி, 8 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களின் வாழ்க்கையில் குழந்தை இல்லாத குறை ஒரு பெரும் துயரமாக இருந்தது.
இந்தச் சூழலில், நவீனின் சின்ன மாமனார் ராமகிருஷ்ணன், யோசிதாவின் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். குழந்தையின்மையால் யோசிதா மன உளைச்சலில் இருந்ததை பயன்படுத்திக் கொண்ட ராமகிருஷ்ணன், தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ரகசிய கேமராக்கள் மூலம் யோசிதாவின் அந்தரங்க வீடியோக்களைப் பதிவு செய்து மிரட்ட தொடங்கினார்.
“உன் கணவனால் உனக்குக் குழந்தை கிடைக்காது. என்னுடன் வா, நாம் சந்தோஷமாக வாழலாம்” என்று அவர் அழைத்துள்ளார். “நீ என்னுடன் வரவில்லை என்றால், இந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பி விடுவேன்” என்றும் மிரட்டியுள்ளார். இதனால், யோசிதா மனதளவில் மேலும் உடைந்துபோனார்.
இந்த துயரத்தைத் தாங்க முடியாமல், யோசிதா தனது தாய் சுஜாதாவிடம் நடந்ததைக் கூறியுள்ளார். சுஜாதா, ராமகிருஷ்ணனை எச்சரித்து வீடியோக்களை அழிக்குமாறு கெஞ்சியுள்ளார். ஆனால், ராமகிருஷ்ணன் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இந்த அவமானம் மற்றும் மன அழுத்தத்தால், கணவனுக்கு தெரியாமல் தனது துன்பத்தை மறைத்த யோசிதா, ஒரு நாள் நவீன் வேலைக்குச் சென்ற பிறகு, தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர், சம்பவம் குறித்து தகவல் அறிந்த கம்மம் காவல்துறையினர், யோசிதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தாய் சுஜாதாவின் புகாரின் பேரில் ராமகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : அடுத்த பேரிடி..!! அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய ஜான் பாண்டியன்..!! எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி..!!



