#Breaking : காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.. மீண்டும் ரூ.80,000-ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் ஷாக்..!

Jewellery 1

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது. அந்த வகையில் கடந்த வாரம் தாறுமாறாக உயர்ந்தது..

கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி நேற்று ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.78,000-ஐ தாண்டியது.. மேலும் கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.79,000ஐ தாண்டியது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று காலை சற்று குறைந்தது.. அதன்படி, இன்று சென்னையில் ஒரு கிராம் ரூ.35 குறைந்து, ரூ.9,790-க்கு விற்பனையானது.. இதனால் ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.79,760க்கு விற்பனை விற்பனை செய்யப்பட்டது.

அந்த வகையில், இன்று வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து, ரூ.137-க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.1,37,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை தங்கத்தின் விலை குறைந்த நிலையில், மாலை மீண்டும் உயர்ந்துள்ளது.. அதன்படி ஒரு கிராம் தங்கம் விலை, ஒரு கிராம் ரூ. 90 உயர்ந்து, ரூ.10,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ரூ. 720 உயர்ந்து ரூ.80,480க்கு விற்பனை செய்யப்படுகிறது.. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..

Read More : இப்போதே தங்கம் வாங்கலாமா? இந்த வருட இறுதி வரை காத்திருக்கலாமா? எதிர்காலத்தில் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும்?

RUPA

Next Post

சமூக ஊடகத் தடைக்கு எதிராக Gen Z தலைமுறையினர் போராட்டம்.. ஒருவர் பலி.. 80க்கும் மேற்பட்டோர் காயம்..!! நேபாளத்தில் பரபரப்பு..

Mon Sep 8 , 2025
Violence Erupts At Massive Gen Z Protests Against Nepal's Social Media Ban, 1 Killed
nepal protest

You May Like