ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் தனது காதலனுடன் பேசிக்கொண்டிருந்தபோது, 3 வாலிபர்களால் கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம் இரவு இளம்பெண் தனது காதலனுடன் தெங்கால் பாலாறு மேம்பாலம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் இருவரும் சாலையோரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களை நோட்டமிட்ட 3 வாலிபர்கள் இருவரையும் மறித்து வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின்னர், திடீரென அந்தப் பெண்ணின் நகை மற்றும் பணத்தைப் பறித்துக்கொண்டதோடு, அவரது காதலனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். காதலனைத் தாக்கிவிட்டு, காதலியை வலுக்கட்டாயமாக அங்கிருந்து தூக்கிச் சென்ற 3 பேரும், அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணும் அவரது காதலனும், நடந்ததை உறவினர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்து அந்த 3 வாலிபர்களையும் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். காதலனுடன் இருந்த இளம்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More : நாள்பட்ட மூட்டு வலிக்கு இந்த தெரபியை யூஸ் பண்ணி பாருங்க..!! எலும்பியல் நிபுணர் கொடுத்த டிப்ஸ்..!!