ஜார்க்கண்ட் மாநிலம் கிரிடி மாவட்டத்தில் திடீரென இரண்டு இளம்பெண்கள் மாயமான நிலையில், போலீஸ் விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. காணாமல் போன பெண்கள் குறித்து அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில், அவர்கள் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். அப்போது, காணாமல் போன பெண்களில் ஒருவரின் காதலனான ஸ்ரீகாந்த் சௌத்ரி மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, அவரைப் பிடித்து விசாரித்தபோது பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தது. ஸ்ரீகாந்த், காணாமல் போன பெண்களில் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்தப் பெண் வேறு ஒருவருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதையறிந்த ஸ்ரீகாந்த், காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. சம்பவத்தன்று, ஸ்ரீகாந்த் தனது காதலியை காட்டுப்பகுதிக்கு அழைத்துள்ளார். அவரும் தனது பெண் தோழியுடன் அங்குச் சென்றுள்ளார். அப்போதும், இருவருக்கிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீகாந்த், காதலியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த தோழியையும் ஸ்ரீகாந்த் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், இருவரது உடல்களையும் மறைத்து வைத்துவிட்டு, எதுவும் நடக்காதது போல சுற்றித் திரிந்துள்ளார்.
இந்நிலையில், விசாரணையை அவர் உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், இரண்டு இளம் பெண்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், காதலி மற்றும் அவரது தோழியை கொலை செய்ததற்காக ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர சம்பவம், அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : இல்லத்தரசிகளே..!! காய்கறிகளை இப்படி மட்டும் சமைச்சிறாதீங்க..!! உடல் எடை, இதய நோய் கூட வரும் அபாயம்..!!