fbpx

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரம் குறைப்பு..? அமைச்சர் முத்துசாமி சொன்ன தகவல்..!!

தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,329 சில்லரை விற்பனை மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளின் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கடந்த ஆண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பு ஆண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் முத்துசாமி, “தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்ற என்னமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை. முதல் முறை குடிக்கும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நேரம் குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

லஞ்சம் தராவிட்டால் சிகிச்சை கிடையாது..!! அதிரவைக்கும் புழல் சிறை மரணங்கள்..!! அம்பலப்படுத்திய அன்புமணி..!!

Thu Oct 19 , 2023
புழல் சிறையில் கையூட்டு தருவதற்கு வசதி இல்லை என்பதாலேயே வாழ வேண்டிய பலர் உயிரிழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”சென்னை புழல் மத்தியச் சிறை கைதிகளுக்கு உண்மையாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அல்லது சிறைவாழ்க்கை கொடுமைகளில் இருந்து விடுபடுவதற்கு நினைத்தாலும் சிறைக்கு வெளியில் உள்ள மருத்துவமனைகளில் புறநோயாளிகளாக மருத்துவம் பெறுவதற்காக பரிந்துரைக்க 50,000 ரூபாயும், உள்நோயாளிகளாக […]

You May Like