தமிழ்நாடு முழுவதும் தற்போது 5,329 சில்லரை விற்பனை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளின் விற்பனை மூலம் மாநில அரசுக்கு கடந்தாண்டு ரூ.36,056 கோடி வருவாய் கிடைத்தது. நடப்பாண்டு ரூ.44,098 கோடி வருவாய் கிடைத்தது. டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள அமைச்சர் முத்துசாமி, “தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளை திடீரென்று மூடிவிட முடியாது. படிப்படியாகத்தான் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை நடத்த வேண்டும் என்ற என்னமோ விருப்பமோ எங்களுக்கு இல்லை. முதல் முறை குடிக்கும் இளைஞர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் நேரம் குறைப்பு குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.