அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்…
ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் அவரின் ஆதராவளார்களாக இருந்த முக்கிய நிர்வாகிகளை கட்சியை விட்டு நீக்கினார்.. எனினும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.. பின்னர் நேற்று ஹரித்வார் செல்வதாக கூறி விட்டு டெல்லி சென்றார் செங்கோட்டையன்.. இந்த நிலையில் இன்று அவர் டெல்லியில் இருந்து தமிழ்நாடு திரும்பினார்..
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ எனக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன்.. அப்போது நான் ஏற்கனவே கூறியது போல, அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்தும் அப்படி இணைந்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பது குறித்தும் எடுத்துக் கூறினேன்.. எங்களை பொறுத்தவரை அதிமுக வலுப்பெற வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம்..” என்று தெரிவித்தார்..
இதனிடையே, இன்று காலை அதிமுகவை சிலர் பிரிக்க நினைப்பதாகவும், அவர்களை அம்மாவின் ஆன்மா மன்னிக்காது எனவும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.. அதில் பேசிய அவர் “ அதிமுகவில் உட்கட்சி பூசல் இருக்கிறது என்பது ஒரு மாயத்தோற்றம்.. ஒற்றுமை என்ற பெயரை வைத்துக்கொண்டு அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர்.. அவரை மாற்றுவோம், இவரை மாற்றுவோம் என்று சொல்பவர்களை எல்லாம் மக்கள் மாற்றிவிடுவார்கள்.” என்று பேசியிருந்தார்..
இந்த நிலையில் இன்று செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது செய்தியாளர்கள் அதிமுகவை சிலர் பிரிக்க நினைப்பதாக ஆர்.பி உதயகுமார் கூறியது குறித்து கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த செங்கோட்டையன் “ அவருடைய அம்மாவே செத்துப் போய் கிடக்கிறாங்க.. முதலில் அதை பார்க்க சொல்லுங்கள்..” என ஆவேசமாக பதிலளித்தார்.. செங்கோட்டையன் பொறுமையை இழந்து ஆவேசமாக பேசியதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ஆர்.பி. உதயகுமாரின் தாய் காலமானது குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவித்து செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டார்.. அப்போது “ ஆர்.பி. உதயகுமாரின் தாயார் காலமானது குறித்து பேசியதற்கு மன்னிக்க வேண்டும்.. தனது தாயை இழந்து வாடும் ஆர்.பி உதயகுமாரின் துக்கத்திற்கு என்னால் செல்ல இயலவில்லை.. அந்த தாயின் அருமை பெற்ற மகனுக்கு தான் தெரியும்.. அவரின் ஆத்மா சாந்தியடைய கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொள்கிறேன்..” என்று தெரிவித்தார்..



