அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் ‘முத்தப் பூச்சிகள்’ (Kissing bugs) வேகமாகப் பரவி வருகின்றன. இவை ‘சாகஸ் நோய்’ என்ற தீவிரமான நோயை ஏற்படுத்துவதால், சுமார் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
‘ட்ரையடோமைன் பூச்சிகள்’ (Triatomine bugs) என்றும் அழைக்கப்படும் இந்த பூச்சிகள், மனிதர்களின் வாய் அல்லது கண்களுக்கு அருகில் கடிப்பதால் ‘முத்தப் பூச்சிகள்’ எனப் பெயர் பெற்றுள்ளன. இவை கடிக்கும்போது, ‘டிரிபனோசோமா க்ரூஸி’ (Trypanosoma cruzi) என்ற ஒட்டுண்ணியைப் பரப்புகின்றன. இந்த ஒட்டுண்ணி, பூச்சியின் மலத்தில் இருக்கும். பூச்சி கடித்த இடத்தில் நாம் சொறியும்போது, இந்த ஒட்டுண்ணி ரத்தம் வழியாக உடலுக்குள் நுழைந்து, இதய மற்றும் செரிமான அமைப்புகளைப் பாதிக்கிறது.
அறிகுறிகள் :
சாகஸ் நோய் இரண்டு கட்டங்களைக் கொண்டது. முதல் கட்டத்தில், தலைவலி, காய்ச்சல், கண் இமை வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். அடுத்த கட்டத்தில், நீண்ட நாட்களுக்குப் பிறகு இதய நோய்கள் மற்றும் தீவிர செரிமானக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு வரை உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், பலருக்கு இந்த நோய் இருப்பது தெரியாது எனவும் கூறப்படுகிறது. அசுத்தமான ரத்தம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அல்லது தாயிடமிருந்து குழந்தைக்கும் இந்த நோய் பரவக்கூடும்.
தடுக்கும் முறைகள் :
சாகஸ் நோயை ஆரம்ப கட்டத்திலேயே குணப்படுத்த முடியும். ஆனால், நோய் நாள்பட்ட நிலையை அடைந்தால் குணப்படுத்துவது கடினம். எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்தப் பூச்சிகளைத் தடுப்பது அவசியம்:
இந்தப் பூச்சிகள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் இருக்கும். அவற்றின் விளிம்புகளில் சிவப்பு, ஆரஞ்சு அல்லது மஞ்சள் நிறக் கோடுகள் காணப்படும். கூர்மையான, கூம்பு வடிவத் தலையும், மெல்லிய கால்களும் இந்தப் பூச்சியின் அடையாளங்கள். அமெரிக்காவில், கலிஃபோர்னியா, டெக்சாஸ், அரிசோனா உட்பட 8 மாநிலங்களில் மனிதர்களுக்கு இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் அதிக வனவிலங்குகளும், வெப்பமான காலநிலையும் பூச்சிகள் பரவ ஏற்ற சூழலை உருவாக்கி உள்ளது.
Read More : OTT-யில் வெளியானது “கூலி”..!! எந்த தளத்தில் தெரியுமா..? குஷியில் ரசிகர்கள்..!!



