ஜீவானந்தம் பார்கவியை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் டீம்.. தர்ஷனுக்கு வந்த மிரட்டல்..!! உச்சக்கட்ட பரபரப்பில் எதிர்நீச்சல் புரொமோ..

ethir neechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி ஹிட் அடித்து வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். இந்த சீரியல் பிரபலமாவதற்கு ஆதி குணசேகரன் கதாபாத்திரம் முக்கிய காரணம்.. நடித்த மாரிமுத்து மறைந்த பிறகு ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் தற்போது வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இந்த கேரக்டர் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் ‘எதிர்நீச்சல் 2’ தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.


ஆதிக்கம் செலுத்தும் ஆண்களிடம் இருந்து பெண்கள் எப்படி வாழ்க்கையை நடத்துகிறார்கள் எனக் கொண்டுசெல்லப்படும் இந்த கதையில் 4 மருமகள்கள் அட்டகாசமாக நடித்து வருகிறார்கள். தற்போதைய கதைக்களத்தை பொறுத்தவரை தர்ஷனுக்கு அன்புக்கரசி உடன் திருமணம் செய்து வைக்க ஆதி குணசேகரனும், தர்ஷனை அவரது காதலி பார்கவி உடன் சேர்த்து வைக்க ஜீவானந்தம் மற்றும் ஜனனியும் போராடி வருகிறார்கள்.

நேற்றைய எபிசோடில், குணசேகரன், ஜனனி டீமை அழைத்து பேசுகிறார். அப்போது, இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும், இந்த கல்யாணம் நடக்க வேண்டும் என்பதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்கிறான். அப்போது ஜனனி, இந்த திருமணம் ஈஸ்வரி அக்கா ஆசைப்பட்டபடி, தர்ஷனுக்கும் பார்கவிக்கும் தான் நடக்கும் என்று சொல்கிறாள். அப்பொழுது, தர்ஷனை தனியாக அழைத்துச் செல்லும் குணசேகரன். அவனிடம் சில விஷயங்களை பற்றி பேசுகிறார்.

பின் தர்ஷன், அனைவர் முன்பும், நான் பார்கவியை திருமணம் செய்து கொள்ள மாட்டேன். தயவுசெய்து, என் வாழ்க்கையில் விளையாடாதீங்க, இங்கிருந்து எல்லாரும் வெளியே போங்க என சொல்கிறான். இதை கேட்டது ஜனனி என்ன செய்வது என்று கோபத்தோடு மண்டபத்தை விட்டு வெளியேறுவதோடு எபிசோடு முடிக்கப்பட்டது. இந்த நிலையில் அடுத்த புரோமோ வெளியாகியுள்ளது.

அதில், மாப்பிள்ளை என்றெல்லாம் பார்க்க மாட்டேன், ஒரே மிதி தான் என தர்ஷனை மிரட்டுகிறார் கதிர். மறுபுறம் ஜீவானந்தத்தை பிடிக்க புலிகேசியின் போலீஸ் டீம் துப்பாக்கி சூடு நடத்துகிறது. அந்த நேரத்தில் சக்திக்கு ஒரு கால் வருகிறது. ஹாஸ்பிடலில் இருக்கும் ஈஸ்வரி மேடம் உயிருக்கு ஆபத்து என ஒரு நபர் சொல்கிறார். அதை மேலிருந்து கதிர் மற்றும் அறிவுகரசி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். கால் செய்தது யார்..? என்ன நடக்கிறது என புரியாமல் ஜனனி டீம் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Read more: மொபைல் செயலியில் கடன் வாங்குவது எவ்வளவு ஆபத்தானது?. என்ன செய்ய வேண்டும்?. என்ன செய்யக்கூடாது?.

English Summary

The police team that shot Jeevanandam Bhargavi.. Threats to Darshan..!! The promo of the counter-swimming is in high excitement..

Next Post

உங்கள் வயிறு ஆரோக்கியமாக இருக்க இந்த பழங்களை சாப்பிடுங்க! மலச்சிக்கல் பிரச்சனையும் சரியாகும்!

Thu Sep 11 , 2025
நாம் உண்ணும் உணவு ஆரோக்கியமாக இருந்தால், செரிமான ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். ஆனால் சில ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால், சிலர் செரிமான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். நல்ல செரிமானத்திற்கு நார்ச்சத்து மற்றும் தண்ணீர் மிகவும் முக்கியம். இருப்பினும், இதனுடன், மெக்னீசியமும் அவசியம். உங்கள் வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்கவும், உங்கள் செரிமானம் சீராக இயங்கவும் விரும்பினால், மெக்னீசியம் உள்ள சில பழங்களை உட்கொள்வது மிகவும் முக்கியம். இந்த பழங்கள் சாப்பிட நல்லது மட்டுமல்ல, […]
Fruits

You May Like