வீடு திரும்பும் வழியில் 9ஆம் வகுப்பு மாணவியை வழிமறித்து, காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் கந்தம்மாள் மாவட்டம் தரிம்பாடி நவரில் வசித்து வருபவர் 9ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது அக்கா வீட்டிற்கு சென்றுவிட்டு, திருவிழாவை பார்ப்பதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். பிறகு, வீட்டிற்கு திரும்பும் வழியில் காரில் வந்த வாலிபர் ஒருவர், லிஃப்ட் தருவதாக கூறியுள்ளார்.
மாணவியும் அதை நம்பி காரில் ஏறியுள்ளார். பின்னர், சிறிது தூரம் சென்றதும் காரில் வைத்து அந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அந்த மாணவி வலியால் துடித்தும் விடாமல் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர், அங்கிருந்து தப்பி வந்த மாணவி, நடந்ததை பெற்றோரிடம் கூற, அவர்கள் உடனே போலீசில் புகாரளித்தனர். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவியிடம் வாக்குமூலம் பெற்று, மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபர் திருமணமானவர் என்பது தெரியவந்துள்ளது.
தற்போது அவர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
Read More : உங்களுக்கு நோயே வரக்கூடாதா..? அப்படினா இந்த பாரம்பரிய உணவுகளை அதிகம் சேர்த்துக்கோங்க..!!