இதுக்கு ஒரு எண்டே இல்லையா? தங்கம் விலை இன்றும் புதிய உச்சம்! ஒரு சவரன் ரூ.82,000 ஐ நெருங்கியதால் பேரதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

1730197140 4512 2 1

உலக பொருளாதாரத்தில் நிலவும் ஏற்ற இறக்கங்களை பொறுத்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்ட பல காரணிகள் தங்கம் விலை உயர்வில் முக்கிய பங்கு வகிக்கின்றன.


ரஷ்யா – உக்ரைன் மோதல், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், ட்ரம்பின் சில அதிரடி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார ஸ்திரத்தனமை இல்லை.. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். எனவே தங்கம் என்பது தற்போது சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறி உள்ளது.

கிட்டத்தட்ட 10 நாட்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.. அதன்படி கடந்த சனிக்கிழமை வரலாறு காணாத புதிய உச்சமாக தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.10,000-ஐ கடந்து, சவரனுக்கு ரூ.79,000ஐ தாண்டியது. பின்னர் கடந்த செவ்வாய் கிழமையும் தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது.. அதன்படி ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 81,000ஐ கடந்ததால் நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்..

இந்த நிலையில் 2-வது நாளாக தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஆனால் இன்று தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.90 உயர்ந்து, ரூ.10,240க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து, ரூ.81,920க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதே போல் இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.. ஒரு கிராம் வெள்ளி ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,40,000க்கு விற்பனை செய்யப்படுகிறது..

Read More : டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு..! சாமானியர்களை எவ்வாறு பாதிக்கும்..?

RUPA

Next Post

தக்காளியை அதிகமாக சாப்பிடுவீங்களா..? இந்த பிரச்சனைகள் வரலாம்... கவனம்!

Fri Sep 12 , 2025
Don't eat too many tomatoes.. These problems can occur... Attention!
tomato 2 1

You May Like