பிரபல விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நாஞ்சில் விஜயன். சமீபத்தில் இவர் மீது திருநங்கை வைஷ்ணவி பரபரப்பு புகார் ஒன்றை சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, நாஞ்சில் விஜயன் தன்னுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்டதாகவும், தற்போது தன்னை தவிர்த்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
வைஷ்ணவி வெளியிட்ட ஒரு வீடியோவில், நாஞ்சில் விஜயன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், அவரது இந்த செயல் தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு தன்னை தள்ளியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், வைஷ்ணவியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, நாஞ்சில் விஜயன் தனது மனைவி மரியவுடன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், அவரது மனைவி மரியா, “என் கணவரை ஏன் இப்படி அவதூறாகப் பேசுறீங்க..? இந்த சம்பவத்தால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை. எங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுத்த வேண்டும் என்று இப்படி செய்கிறீர்களா..?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாஞ்சில் விஜயன் பேசுகையில், “எனக்கும் வைஷ்ணவிக்கு எந்த தொடர்பும் இல்லை. நான் அவரை ஒரு சகோதரி போல தான் பார்த்தேன். அவர் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்பி வருகிறார்” என்று கூறியுள்ளார்.
இரு தரப்பினரின் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்துவார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.